காஷ்மீர் தீவிரவாதத்தை அடக்க முன்வருகிறது இஸ்ரேல்
ஹைதராபாத்:
காஷ்மீரில் தீவிரவாதத்தை கட்டுக்குள் கொண்டு வர, இந்தியாவுக்கு உதவ இஸ்ரேல் தயாராக இருப்பதாக முன்னாள் இஸ்ரேலிய பிரதமர் ஷிமோன்பெரஸ் தெரிவித்தார்.
பெரஸ் புதன்கிழமை நிருபர்களிடம் பேசும் போது கூறுகையில், காஷ்மீரில் தீவிரவாதிகளை அடக்கும் விஷயத்தில் இந்தியாவுக்கு இஸ்ரேலின் உதவிதேவைப்படாது என நினைக்கிறேன்.
இந்தியாவைப் போலவே இஸ்ரேலிலும் தீவிரவாதிகள் பிரச்சனை இருக்கிறது. தீவிரவாதத்தை அடக்குவது மிகக் கடுமையான விஷயம். இது போரைசந்திப்பதை விட மிக கடுமையானது. இதனால் காஷ்மீரில் தீவிரவாதத்தை கட்டுக்குள் கொண்டு வர இஸ்ரேல் தயாராக இருக்கிறது.
அமெரிக்காவில் ஏற்படும் அதிபர் மாற்றத்தால் மேற்கு ஆசியாவில் மேற் கொள்ளப்பட்டு வரும் அமைதி முயற்சியில் எந்த விதமான பாதிப்பும்ஏற்படாது. அமெரிக்க அதிகாரிகள் அயல் நாட்டு விஷயங்களில் அதிக கவனம் செலுத்துவார்கள் எனக் கூறினார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications