பாம்பு விஷத்தை முறிக்க கோழி முட்டை
கோவை:
பாம்பு விஷத்தை முறிவடையச் செய்ய குதிரை ரத்தத்திற்குப் பதிலாக கோழிமுட்டையைப் பயன்படுத்தலாம் என கோவை பி.எஸ்.ஜி கல்லூரி பேராசிரியர் சிபாரிசுசெய்துள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் உள்ள கிங்ஸ் இன்ஸ்டியூட்டில் இருந்த 28குதிரைகள் இறந்து போயின. இவை அனைத்தும் பாம்பின் விஷத்திற்கு மாற்று மருந்துதயாரிக்க ரத்தம் அளித்து வந்த குதிரைகளாகும்.
குதிரைகள் சாவால், மத்திய அமைச்சர் மேனகா காந்திக்கும் தமிழக சுகாதாரத் துறைஅமைச்சர் ஆற்காடு வீரசாமிக்கும் இடையே பெரும் மோதலை ஏற்படுத்தியது.
பொதுவாக இந்த மருந்து தயாரிப்பில், பாம்பின் விஷம் குறிப்பிட்ட அளவுகுதிரைகளுக்குச் செலுத்தப்படுகிறது. மிகவும் சிறிய அளவில் செலுத்தப்படும் இந்தவிஷத்தால் குதிரைகள் இறக்காது. அதே சமயம், குதிரைகளின் உடலில் ஒரு எதிர்ப்புபுரோட்டீன் உருவாகும். இந்த புரோட்டீனைப் பிரித்தெடுத்து, பாம்பு விஷத்தைமுறியடிக்கும் மருந்து தயாரிக்கப்படுகிறது. இதனை முயல்களைப் பயன்படுத்தியும்தயாரிக்க முடியும்.
ஆனால் முட்டையின் கருவிலிருந்து விஷ முறிவு மருந்து தயாரிக்க முடியும் என்றுகாவை பி.எஸ்.ஜி கலை அறிவியல் கல்லூரியின் நுண் ணூ
அவர் கூறுகையில், கடந்த 1992ம் ஆண்டு உலக சுகாதார நிறுவனம் இம் மருந்தைகோழி முட்டையிலிருந்து தயாரிக்கலாம் என கூறியிருந்தது. இதன்படி கோழிக்குபாம்பின் விஷத்தை செலுத்தும்போது அதற்கு எதிர்ப்பு பொருள் உருவாகிறது. இந்தஎதிர்ப்பு பொருள், கோழியின் முட்டைக்குச் சென்று, கருவில் கலக்கிறது.
முட்டையின் மஞ்சள் கருவிலிருந்து பாம்புக் கடிக்கான எதிர்ப்பு பொருளைப்பிரித்தெடுக்க இயலும். குதிரையிடமிருந்து பிரித் தொடுக்க 6 லிட்டர் ரத்தம் தேவை.எனவே இதனால் குதிரைகள் பெரும் பாதிப்பிற்குள்ளாகின்றன. ஆனால், கோழிமுட்டையிலிருந்து 10 மில்லி கிராம் வரை இந்த பாம்பின் விஷ எதிர்ப்புப் பொருளைப்பிரித்தெடுக்கலாம். இதனால் செலவு மிச்சமாகும். குறைந்த விலையில் இந்த விஷமுறிவு மருந்துகளை விற்பனை செய்யவும் வாய்ப்பு உண்டு என்கிறார் மைக்கேல்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications