மேட்ச் பிக்ஸிங் .. கபில்தேவிடம் 3 மணி நேரம் விசாரணை
டெல்லி:
கிரிக்கெட் சூதாட்டம் தொடர்பாக இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் கபில் தேவிடம் புதன்கிழமை 3 மணி நேரம் மாதவன் விசாரணை நடத்தினார்.
கிரிக்கெட் சூதாட்டம் தொடர்பாக சி.பி.ஐ அறிக்கையின் அடிப்படையில் கிரிக்கெட் போர்டு லஞ்ச ஒழிப்பு கமிஷனர் கே.மாதவன் விசாரணை நடத்தி அறிக்கைதாக்கல் செய்தார்.
இதன் அடிப்படையில் அசாரூதீன், அஜய் சர்மா ஆகியோருக்கு ஆயுட்காலத் தடையும், மனோஜ் பிரபாகர், அஜய் ஜடேஜா, அலி இரானி ஆகியோருக்கு 5ஆண்டு காலத் தடையும் விதிக்கப்பட்டது.
இந்நிலையில் கபில்தேவிடம் டெல்லியில் விசாரணை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து மாதவன் புதன்கிழமை கபில்தேவிடம் 3மணி நேரம் விசாரணை நடத்தினார்.
விசாரணைக்குப்பின் மாதவன் நிருபர்களிடம் கூறியதாவது:
கபில்தேவிடம் அவர் கேட்டுக்கொண்டதற்கேற்ப ரகசிய இடத்தில் விசாரணை நடந்தது. விசாரணைக்கு அவர் நல்ல ஒத்துழைப்பு தந்தார். எல்லாகேள்விகளுக்கும் பதில் அளித்தார்.
சி.பி.ஐ யிடம் கூறப்பட்ட தகவலைக் கூறினாலும் சில புதிய உண்மைகளையும் கூடுதலாகத் தெரிவித்தார். 15 பக்கங்களில் அவரது வாக்குமூலங்கள் பதிவுசெய்யப்பட்டது என்றார் மாதவன்.












Click it and Unblock the Notifications