தண்ணீர், தண்ணீர் .. பாண்டி. முதல்வர் கவலை

Subscribe to Oneindia Tamil

பாண்டிச்சேரி:

பாண்டிச்சேரியில் குடிநீர் பற்றாக்குறை ஏற்ப்பட்டுள்ளதால் இங்குள்ள மக்கள் நிலத்தடி நீரை தேடிப்போகும்அளவுக்கு அல்லல் படுகின்றனர் என்று முதல்வர் சண்முகம் தெரிவித்தார்.

காரைக்காலில் உள்ள டி.ஆர்.பட்டினத்தில் ரூ 1.46 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள நீர் சுத்திக்கரிப்புநிலையத்தைத் திறந்து வைத்து அவர் பேசியதாவது:

பாண்டிச்சேரி மக்கள் நீரை மிகச் சிக்கனமாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அநாவசியமாக குடிநீரை பிறவிஷயங்களுக்குப் பயன்படுத்தக் கூடாது.

பிரான்ஸ் நாட்டு உதவியுடன் பாண்டிச்சேரி அரசு மிகப்பெரிய குடிநீர் சேமிப்பு திட்டம் ஒன்றைத் துவங்கவுள்ளது.

காரைக்காலில் இன்னும் அதிக குடிநீர் சுத்திக்கரிப்பு நிலையங்கள் அமைக்கப்படும். அரசு இதற்கானநடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் காரைக்கால் பகுதியை மேம்படுத்துவதற்கும் அரசு பலமுயற்சிகளை மேற்கொண்டு வருகிறது என்றார்.

சுற்றுலாத்துறை அமைச்சர் ரங்கசாமி கூறுகையில், பாண்டிச்சேரியில் குடிநீருக்காக ஆண்டுதோறும் ரூ 7 கோடிசெலவிடப்படுகிறது. குடிநீர் விநியோகத் திட்டமும் விரைவில் அமல்படுத்தப்படும் என்றார்.

யு.என்.ஐ.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+