கூரையைப் பிய்க்கும் காங். கோஷ்டி பூசல்
சென்னை:
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இளங்கோவன் நீடிக்கக் கூடாது என்று தங்கபாலு தலைமையிலான காங்கிரஸ் தலைவர்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.
அவர்கள் வெள்ளிக்கிழமை கூடி ஆலோசனை நடத்துகிறார்கள்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் திண்டிவனம் ராமமூர்த்தியை தலைவர் பதவியில் இருந்து நீக்கி விட்டு அவருக்குப் பதிலாகஈவிகேஎஸ் இளங்கோவன் நியமிக்கப்பட்டார்.
இளங்கோவன் கட்சித் தலைவராக நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்புக் கிளம்பியது. முன்னாள் காங்கிரஸ் கமிட்டித் தலைவர் தங்கபாலு, திண்டிவனம் ராமமூர்த்திஆகியோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இரு தரப்பினரும் டெல்லிக்குச் சென்று சோனியா காந்தியை சந்தித்து தங்களது கருத்துக்களை வலியுறுத்தி வந்தனர். இந்த நிலையில் மீண்டும் இளங்கோவன்தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டார்.
தலைவராக நியமிக்கப்பட்ட அவர் காங்கிரஸ் கமிட்டியில் எவ்வித கருத்து வேறுபாடும் கிடையாது என்று அறிவித்தார். ஆனால் மீண்டும் இளங்கோவனைநியமினம் செய்ததற்கு தங்கபாலு ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து சோனியா காந்திக்குத் தந்தி அனுப்பினார்கள்.
இந்நிலையில் தங்கபாலு ஆதரவாளர்கள் வெள்ளிக்கிழமை சென்னை நியு உட்லண்ட்ஸ் ஹோட்டலில் கூடுகிறார்கள். இவர்கள் முக்கிய முடிவுகள்எடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications