பாக். செல்லும் ஹூரியத் குழுவினர் பெயர் அறிவிப்பு
ஸ்ரீநகர்:
காஷ்மீர் பிரச்சனையைத் தீர்க்கும் வகையில் பாகிஸ்தான் சென்று பேச்சுவார்த்தை நடத்த ஐந்து பேர் கொண்ட குழுவில் இடம்பெற்றுள்ளவர்கள் பெயரைஹூரியத் அமைப்பினர் வியாழக்கிழமை வெளியிட்டனர்.
ஐவர் குழுவில் இடம்பெற்றுள்ளவர்கள் பெயர்:
மக்கள் கட்சியைச் சேர்ந்த அப்துல் கானி லோன், அவாமி கமிட்டியைச் சேர்ந்த மவுலானா உமர் பரூக், ஜமாத் ஈ இஸ்லாமி அமைப்பைச் சேர்ந்த சையத் அலிஷா, இடேஹாட் உல் முஸ்லீமின் அமைப்பைச் சேர்ந்த மவுலானா அபாஸ் அன்சாரி, மக்கள் லீக் அமைப்பைச் சேர்ந்த ஷேக் அப்துல் அஸிஸ் ஆகியோர்.
ஹூரியத் அமைப்பினர் 7 பேர் கொண்ட குழுவை பாகிஸ்தானுக்கு அனுப்பும் என்று ஏற்கனவே கூறியிருந்தது. ஆனால் தற்போது 5 பேர் கொண்ட குழுவைமட்டுமே அனுப்பத் தீர்மானித்துள்ளது.
ஹூரியத் அமைப்புத் தலைவர்களில் ஒருவரான யாசின் மாலிக் இவர்களது பெயரை அறிவித்தார். மேலும் இவர்கள் அனைவரும் ஜனவரி 15 ம் தேதிபாகிஸ்தான் சென்று அங்குள்ள அரசியல் தலைவர்கள் மற்றும் தீவிரவாத அமைப்புக்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications