இலங்கையைக் கலக்கும் காகங்கள்
கொழும்பு:
இலங்கையில் காக்கைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சுற்றுச்சூழல் ஆய்வொன்றில் தெரிய வந்துள்ளது.அதே சமயம், பிற பறவைகளின் எண்ணிக்கை கணிசமான அளவு குறைந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலைநகர் கொழும்பில்தான் காக்கைகள் அதிக அளவில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்குக் காரணம்,கொழும்பு நகரில் பெருகி வரும் குப்பைகளே. சுற்றுச்சூழல் கல்விக் கழகம் என்ற அமைப்பு இந்த ஆய்வைமேற்கொண்டது.
காக்கைகள் பெருகி வரும் அதே நேரத்தில் பிற பறவைகளின் எண்ணிக்கை குறைந்து வருவதாகவும்தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பைச் சேர்ந்த ஜெகத் குணவர்த்தனே கூறுகையில், கொழும்பு நகரில் பாஸ்ட்புட் உணவு விடுதிகள் அதிகரித்து வருகின்றன. இந்த விடுதிகளிலிருந்து வெளியேறும் கழிவுகள், குப்பைகள் நகரில்அதிகமான அளவில் உள்ளது. இதன் காரணமாக இவற்றைத் தேடி அதிக அளவிலான காக்கைகள் வருகின்றன.
மேலும் காக்கைகளின் கருவுறு காலம் பிப்ரவரி, மார்ச் மாதங்களில்தான் அதிகமாக இருக்கும். ஆனால் இப்போதுஜூன் முதல்வ ஆகஸ்ட் மாத வரையிலும் புதிதாக கருவுறு காலம் ஏற்பட்டுள்ளது.
காக்கைகள் நாம் நினைப்பது போல இல்லை. அவை புத்திசாலித்தனமானவை. அதன் காரணமாகவே, பிறபறவைகளை விட இவை அதிக அளவில் உயிர் வாழ்கின்றன. இவற்றின் பெருக்கத்தால் பிற பறவைகள் உயிர்வாழ்வது குறுகி விடும் அபாயம் உள்ளது என்றார் குணவர்ததனே.
இலங்கையில் இரண்டு வகையான காக்கைகள் உள்ளன. கருப்பு அல்லது ஜங்கிள் காக்கை மற்றும் ஹவுஸ் காக்கை.இவற்றில் முதல் வகை காக்கைகளால் பிரச்சினை இல்லை. ஆனால் இரண்டாவது வகை காக்கைகள் மிகவும்ஆபத்தானவை. பிற பறவைகளைத் தாக்குவது, அவற்றின் முட்டைகளை உடைப்பது, சாப்பிடுவது போன்றமூர்க்கத்தனமான குணங்கள் அவற்றிடம் உள்ளது. இதனால் எதிர்காலத்தில், பிற பறவைகளுக்கு இவை பெரும்பிரச்சினையாக இருக்கும்.
காக்கைகளை இலங்கை மக்கள் புனிதமாக கருதுகின்றனர். புத்த மதத்தைச் சேர்ந்தவர்கள் காக்கைகளுக்காகசிறப்புப் பூஜைகள் கூட நடத்துகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐ.ஏ.என்.எஸ்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications