அலங்காநல்லூரில் 16-ம் தேதி ஜல்லிக்கட்டு
மதுரை:
பொங்கல் திருநாளை முன்னிட்டு அலங்காநல்லூர் ஜல்லிக் கட்டு ஜனவரி மாதம் 16ம் தேதி நடக்கிறது. இதனை உலக நாடுகளைச்சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் கண்டு களிக்கவுள்ளனர்.
பழங்காலந் தொட்டு பொங்கல் திருநாளை முன்னிட்டு வீர விளையாட்டுகள் தமிழகத்தில் இடம் பெற்று வருகிறது. ஒவ்வொருபகுதியிலும் வித்தியாசமான போட்டிகள் இடம் பெறுவது வழக்கம்.
இந்த தமிழர் திருநாளான பொங்கல் நாளில் வீரத்திற்கு முதலிடம் அளிக்கப்படுகிறது.
சர்வதேச அளவில் புகழ்வாய்ந்த விளையாட்டு தான் ஜல்லிக்கட்டு எனப்படும் காளை அடக்கும் வீர விளையாட்டு.
அலங்காநல்லூரில் ஒவ்வாரு ஆண்டும் சிறப்பாக நடக்கும் இந்த வீர விளையாட்டு இந்த ஆண்டு ஜனவரி மாதம் 16ம் தேதிநடக்கிறது. இந்த விளையாட்டு அலங்காநல்லூர் காளியம்மன் முனியப்பசாமி கோயில் திருவிழாவையடுத்து நடக்கிறது.
சர்வதேச நாடுகளிலிருந்து இந்த விளையாட்டைக் காண சுற்றுலாப் பயணிகள் வந்து குவியத் தொடங்கியுள்ளனர். உள்நாட்டு,வெளிநாட்டு டி.வி சேனல்களும் இதனைப் படம் பிடிக்க, இடத்தை தேர்வு செய்து வருகின்றனர். அமெரிக்கா, நார்வே, சிங்கப்பூர்,டென்மார்க், ஹாலந்து, ஆகிய நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் தற்போது அலங்காநல்லூரில் முகாமிட்டுள்ளனர்.
இந்த ஆண்டு நடக்கும் ஜல்லிக் கட்டில் பூஸ்ட் நிறுவனம் தங்கக் காசுகளை பரிசாக அளிக்கவுள்ளது. இதனால், அலங்காநல்லூர்ஜல்லிக் கட்டு இந்த ஆண்டு களை கட்டும் என்று தெரிகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications