காய்களை நகர்த்துகிறது பா.ம.க.
சென்னை:
தமிழக சட்டமன்றத்திற்கும், பாண்டிச்சேரிக்கும் தேர்தல் நடக்க இன்னும் 3 மாதங்களேஇருக்கும் நிலையில் பாட்டாளி மக்கள் கட்சி தனது அரசியல் யுக்திகளை பயன்படுத்ததொடங்கியுள்ளது.
தேர்தல் என்றாலே தந்திரங்கள், சாமர்த்தியங்கள், பேரங்கள், கூட்டணி மாற்றங்கள்என்பவை தவிர்க்க முடியாதவை. பல சுவாரஸ்யமான மாற்றங்களும், எதிர்பாராததிருப்பங்களும் தேர்தல் காலத்தில் காணப்படும் சுவையான காட்சிகளாகும்.
இந்த தேர்தலில் அனைவரையும் சஸ்பென்சில் வைத்திருப்பது பாட்டாளி மக்கள் கட்சி.அக் கட்சியின் நிறுவனத் தலைவர் ராமதாசின் அறிக்கைகளும். அவர் எடுக்கும்நடவடிக்கைகளும் நாளுக்கு நாள் வித்தியாசமான பல யூகங்களுக்கு வழி வகுத்துக்கொண்டிருக்கிறது.
அவரது கவனம் தற்போது பாண்டிச்சேரியின் முதல்வர் பதவியின் மீதுள்ளது. பாட்டாளிமக்கள் கட்சியிலுள்ள ஒரு தரப்பினர், வேறு விதமான கருத்தில் உள்ளனர்.பாண்டிச்சேரியில் பா.ம.க. வெற்றி பெற்றால் தேசிய ஜனநாயக கூட்டணியை விட்டுவிலகவேண்டும். அதே சமயம் ராமதாசின் மகன் அன்புமணியை பாண்டிச்சேரியின்முதல்வராக ஆக்கக் கூடாது.
தேசிய ஜனநாயக கூட்டணி பாண்டிச்சேரியில் தற்போதுள்ள அ.இ.அ.தி.மு.க.,த.மா.கா., காங்கிரஸ் கூட்டணியை வென்றால் பாட்டாளி மக்கள் கட்சி முதல்வர்பதவியை கேட்கும். அது கொடுக்கப்பாவிட்டால் பா.ம.க. தே.ஜ கூட்டணியை விட்டுவிலகிவிடும் என்று அவர்கள் கூறி வருகின்றனர்.
அவர்கள் மேலும் தெரிவிக்கையில், பாண்டிச்சேரியில் பா.ம.க.வுக்குதேவையானவற்றை கொடுக்க தி.மு.க. சம்மத்தித்தால் பா.ம.க. தமிழகத்தில் சட்டமன்றதேர்தல் சீட்டுகளில் விட்டுக் கொடுக்க சம்மதிக்கும் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
அவர்கள் மேலும் கூறுகையில், தேசிய ஜனநாயக கூட்டணியில் இருக்கும் தமிழகராஜீவ் காங்கிரஸ் தலைவர் வாழப்பாடி ராமமூர்த்தி தான் அன்புமணியை பா.ம.க.முதல்வராக்க முனைகிறது என்ற புரளியை பரப்பி வருகிறார். அ.தி.மு.க.வுடன் பா.ம.க.நட்புறவு கொள்ளும் என்றும் தவறான செய்திகளை வாழப்பாடி பரப்பி வருவதாகவும்அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
வாழப்பாடி ராமமூர்த்தி தே.ஜ. கூட்டணியிலிருந்து விலக்கப்பட வேண்டும் என பா.ம.க.கூறியுள்ளது. ஆனால் வாழப்பாடி ராமமூர்த்தியோ, தேசிய முன்னணியில்தொடர்ந்து த.ரா.கா. நீடிக்கும் என கூறியுள்ளார்.
தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு தலைமை ஏற்றுள்ள தமிழக முதல்வர்பா.ம.க.வின் கோரிக்கை ஏற்க முடியாதது எனவும் தே.ஜ. கூட்டணியிலிருந்துவிலகுவதற்கு பா.ம.க. காரணம் தேடி வருகிறது எனவும் வாழப்பாடி கூறியுள்ளார்.
மத்தியில் தே.ஜ.கூட்டணிக்கு தலைமை ஏற்றுள்ள பாரதீய ஜனதா கட்சி தமிழகத்தில்இருக்கும் தே.ஜ.கூட்டணி கட்சிகளிடையே ஒற்றுமையை நிலை நிறுத்த விரும்புகிறது.தமிழக சட்ட மன்ற தேர்தலை ஒற்றுமையுடன் கூட்டணி கட்சிகள் எதிர்கொள்ளவேண்டும் என பா.ஜ. விரும்புகிறது.
பாண்டிச்சேரியில் எந்த கட்சி அதிக இடங்களை பெறுகிறதோ அந்த கட்சிபாண்டிசசேரியில் ஆட்சி அமைக்கும் என பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்ஜனா கிருஷ்ணமூர்த்தி கூறியுள்ளார்.
எண்ணங்கள் பலப்பல. கருத்துக்கள் பலப்பல. ஆசைகள் பலப்பல. தேர்தல் நெருங்கநெருங்க கூட்டணிகள் பல மாறும். கூச்சல்கள் பல கிளம்பும். தேர்தல் முடிந்த பின்போ...? நினைத்தது நடக்காவிட்டால் தோழமையாக இருந்த கூட்டணிகள் கட்சிகளேவிரோதிகளாகி ஒரு வர் மேல் ஒருவர் சேற்றை வாரி இறைத்துக் கொள்வார்கள்.
இது எப்போதும் நடை பெறுவதுதான். இந்த முறையும் விதிவிலக்கு இருக்கவாப்போகிறது. காத்திருப்போம், காணக் கிடைக்காத காட்சிகளைக் காண.
ஐ.ஏ.என்.எஸ்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications