விருந்தாகும் விருந்தாளிகள்
தாக்கா:
சைபீரியாவிலிருந்து வங்கதேசத்திற்கு வரும் ஆயிரக்கணக்கான பறவைகளை, வங்கதேசத்தவர்கள் வேட்டையாடிசாப்பிட்டு வருவதாக தெரிய வந்துள்ளது.
தாக்கா தெருக்களில் இதுபோல வேட்டையில் சிக்கி உயிரிழந்த பறவைகளை பலரும் தங்களது தோளில் தூக்கிப்போட்டுக் கொண்டு செல்வதை சாதாரணமாக காணலாம். இந்தப் பறவைகளுக்கு உள்ளூர் மார்க்கெட்டில் நல்லமவுசு இருப்பதுதான் கொடுமையிலும் கொடுமை.
மொக்பஸார் என்ற இடத்தில்தான் இதுபோல வெளிநாட்டுப் பறவைகள் அதிகளவில் விற்கப்படுகின்றன. இந்தஇடம் காவல் நிலையத்திற்கு அருகில்தான் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. எம்.பிக்கள் விடுதியும்அருகில்தான் இருக்கிறது.
வெளிநாட்டுப் பறவைகளை வேட்டையாடுவதைத் தடுக்க வங்கதேச அரசு சீரியசாக இதுவரை எந்தநடவடிக்கையையும் எடுக்கவில்லை. வன விலங்குகள் பாதுகாப்புச் சட்டம் வங்கதேசத்தில் உறுதியாக இல்லை.இந்த சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவோர் அதிகபட்சம் 2 ஆண்டுகள் மட்டுமே சிறைத் தண்டனை பெறுகிறார்.அதுவும் கூட சரியாக அமல்படுத்தப்படுவதில்லை.
தாக்கா பல்கலைக்கழக உயிரியல்துறை பேராசிரியர் முகம்மது பிரோஸ் ஜமான் இதுகுறித்துக் கூறுகையில்,குளிர்காலத்தில் வங்கதேசத்திற்கு குறைந்தது 200 சைபீரியப் பறவைகள் வருவதுண்டு. ஆனால் கடந்த சிலஆண்டுகளாக இந்த எண்ணிக்கை குறைந்து விட்டது. இப்போது 150 பறவைகளுக்கும் குறைவாகவே வருகின்றன.
வருகிற பறவைகளை பிடித்து சாப்பிடுவதும் இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். வங்கதேசம்தான் சைபீரியப்பறவைகளுக்கு மிகவும் பிடித்த இடம். அதனால்தான் இஙகு அவை அதிகளவில் வருகின்றன. விருந்தாளியாகவருகிற பறவைகளையே விருந்தாக்குவது கொடுமையான ஒன்று என்றார் அவர்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications