பசுவுக்கு மடம் தேவை .. கூறுகிறார் ராம.கோபாலன்
சென்னை:
பக்தர்களால் காணிக்கையாக விடப்படும் பசுக்களை அரசு பசு மடம் அமைத்துபராமரிக்க வேண்டும் என தமிழக முதல்வரிடம் இந்து முன்னணி மாநில நிறுவனஅமைப்பாளர் ராம. கோபாலன் கேட்டுக்கொண்டார்.
கோயில்களில் பக்தர்கள் தங்காள் வேண்டிக் கொண்டபடி பசுக்களை காணிக்கையாகவிடுவதுண்டு. அவை ஏலம் விடப்படும். இது போல் பசுக்களை ஏலம் விடாமல் அரசுபசு மடம் அமைத்து பராமரிக்க வேண்டும் என இந்து முன்னணி அமைப்பின் மாநிலநிறுவன அமைப்பாளர் ராம கோபாலன் தமிழக முதல்வரை கேட்டுக் கொண்டுள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், நானும், மாநில அமைப்பாளர் வீரபாகுவும்முதல்வரை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினோம்,
அப்போது கோவில்களில் வேண்டுதலுக்காக விடப்படும் பசுக்களை ஏலம்விடக்கூடாது. அரசே பசு மடம் அமைத்து பராமரிக்க வேண்டும். அல்லது பசுக்களைபராமரிக்க முன் வருபவர்களிடம் ஒப்படைக்க வேண்டும்.
கோவில் சிலை உடைப்பு குறித்து விசாரிக்க விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும்.கோயில்களுக்கு சுதந்திர வாரியம் அமைக்க வேண்டும்.
மண்டைக்காடு கலவரம் தொடர்பாக நியமிக்கப்பட்ட நீதிபதி வேணுகோபால் கமிஷன்கூறிய பரிந்துறையை அமல் படுத்த வேண்டும் உள்ளிட்ட 7 கோரிக்கைகளைமுதல்வரிடம் கூறினோம். அவர் இவை குறித்து கவனிப்பதாக கூறினார்.
அவரிடம் அரசியல் குறித்து நாங்கள் எதுவும் பேசவில்லை. அது குறித்து பேசவேண்டியது பாரதீய ஜனதாதான் என்றார்.
தி.மு.க. இந்துக்களுக்கு எதிராக செயல்படுகிறது. இதனால் வரவிருக்கும் சட்டசபைதேர்தலில் தி.மு.க.வை தோற்கடிக்க இந்து முன்னணி பாடுபடும் என ராம கோபாலன்கூறிவந்தார். அவர் இப்போது முதல்வர் கருணாநிதியை சந்தித்து பேசியுள்ளதுமுக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.












Click it and Unblock the Notifications