இலங்கையில் கைதானவர் மதுரையில் தப்பினார்

Subscribe to Oneindia Tamil

மதுரை:

இலங்கையிலிருந்து கொண்டு வரப்பட்ட ராமநாதபுரம் இளைஞர், விமானம் மூலம் மதுரை கொண்டுவரப்பட்டபோது, அங்கிருந்து போலீஸாரை ஏமாற்றி விட்டுத் தப்பிவிட்டார்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ராமநாதபுரம் மாவட்டம் பனைக்குளம் என்ற பகுதியில், கடற்கரையில், விடுதலைப்புலிகளுக்காக கொண்டு செல்லப்படவிருந்த ரூ. 2 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்தசம்பவம் தொடர்பாக சுங்கத்துறை அதிகாரிகள் மூர்த்தி என்பவரைத் தேடி வந்தனர்.

தலைமறைவான மூர்த்தி, டிசம்பர் மாதம் 2-ம் தேதி, இலங்கைக்கு படகு ஒன்றில் தப்பிச் சென்றார்.ஆனால் அவரைஇலங்கை போலீஸார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட மூர்த்தி குறித்து இந்தியத் தூதரக அதிகாரிகள்,சென்னையிலுள்ள தூதரகம் மூலம் ராமேஸ்வரத்திற்குத் தகவல் கொடுத்தனர்.

இதன் பின்னர் மூர்த்தி, 12-ம் தேதி இலங்கையிலிருந்து, விமானம் மூலம் திருவனந்தபுரத்திற்கு அனுப்பப்பட்டார்.அங்கிருந்து மதுரை கொண்டு வரப்பட்டார். அவரை ராமேஸ்வரம் சப் இன்ஸ்பெக்டர் சிங்கராயர் அழைத்துக்கொண்டு ராமேஸ்வரம் செல்வதற்காக மதுரை மாட்டுத்தாவணி ஒருங்கிணைந்த பஸ் நிலையத்திற்கு கூட்டி வந்தார்.

அங்கு சிங்கராயரை ஏமாற்றி விட்டு மூர்த்தி தப்பினார். இதுதொடர்பாக மதுரை போலீஸில் புகார்செய்யப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+