பிரிவுத் துயரால் விமானத்தை தாமதப்படுத்திய கணவர்
சென்னை:
மனைவியை விட்டு பிரிய விரும்பாத கணவனால் விமான நிலையத்தில் பதற்றம்ஏற்பட்டு விமானம் தாமதமாக புறப்பட்டு சென்றது.
சில நாட்களுக்கு முன் தன் காதலனை சிங்கப்பூருக்கு செல்ல வேண்டாம் என தடுத்தநர்ஸ் ஒருவர், காதலன் பிடிவாதமாக சிங்கப்பூர் சென்றதால், மனமுடைந்து விஷ ஊசிபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அதேபோன்ற ஒரு நிகழ்ச்சி சென்னையில் நடந்துள்ளது. ஆனால் இதில் மனைவியைப்பிரிய மனமில்லாத கணவரால், விமானம் புறப்பட்டுச் செல்வது தாமதமானது.
சிவகங்கையைச் சேர்ந்தவர் முப்தாரிப் (40). இவருக்கு சவுதியில் வேலை கிடைத்தது.அதையொட்டி சவுதி செல்வதற்காக திங்கள்கிழமை காலை தன் மனைவி மற்றும்குடும்பத்தாருடன் சென்னை விமான நிலையம் வந்தார்.
காலை 9 மணிக்கு விமானம் கிளம்ப தயாராக இருந்தது. அனைவருக்கும் பிரியாவிடை கொடுத்து விட்டு விமானத்தில் ஏறி அமர்ந்தார். சுமார் 20 நிமிட நேரம்விமானத்தில் இருந்த அவரை மனைவியின் நினைவு வாட்டியது. மனைவியை விட்டுபிரிய வேண்டுமே என்ற நினைப்பே அவரை துயரப்படுத்தியது.
விமானம் கிளம்பும் நேரமும் வந்து விட்டது. விமானியும் வந்து விட்டார். முப்தாரிப்,துயரத்தின் உச்சகட்டத்தை எட்டினார். உடனடியாக விமானத்தை விட்டு இறங்கி தன்மனைவியை நோக்கி ஓட ஆரம்பித்தார். இவர் ஓடுவதை கண்ட விமானி குழம்பினார்.முப்தாரிப், விமானத்தில் குண்டு வைத்து விட்டு ஓடுவதாக நினைத்த அவர் விமானநிலைய அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார்.
முப்தாரிப்பை விமான நிலைய அதிகாரிகள் விமான ஒடு பாதையில் துப்பாக்கியுடன்சுற்றி வளைத்தனர். இதைக் கண்ட பயணிகளும் பயந்து விமானத்தை விட்டு இறங்கிஓடினர்.
முப்தாரிப்பை போலீசார் விசாரித்த போது மனைவியைவிட்டு சவுதி போகவிரும்பவில்லை அதனால் விமானத்தை விட்டு இறங்கி ஒடி வந்தேன் என கூறினார்.அவரை நம்பாத போலீசார் வெடிகுண்டு நிபுணர்களுடன் விமானத்தை சோதனைசெய்து குண்டு எதுவும் இல்லை என தெரிந்த பின்னரே விமானத்தை எடுக்கஅனுமதித்தனர்.
முப்தாரிப் செய்த குழப்பத்தால், காலை 9 மணிக்கு கிளம்ப வேண்டிய விமானம்மாலை 3.30 மணிக்குத்தான் கிளம்பி சென்றது.
முப்தாரிப் இன்னும் போலீஸ் காவலில் தான் இருக்கிறார். விமானம் பத்திரமாக சவுதிபோய் சேர்ந்ததாக தகவல் கிடைத்த பின்தான் முப்தாரிப் விடுதலை செய்யப்படுவார்என போலீசார் தெரிவித்தனர்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications