சீனப் புத்தாண்டு ஸ்பெஷல் .. 80 கிலோ அனகொண்டா
சிங்கப்பூர்:
வரவிருக்கும் சீனப்புத்தாண்டை வரவேற்பதற்காக தென் அமெரிக்காவில் உள்ள கயானா தீவிலிருந்து 80 கிலோ எடையுள்ள அனகொண்டா பெண்பாம்பும், உலகத்திலேயே மிகவும் பெரிதான இரண்டு பெண் பாம்புகளும் சிங்கப்பூர் வனவிலங்குப் பூங்காவிற்குக் கொண்டு வரப்பட்டுள்ளன.
இதுகுறித்து சிங்கப்பூர் வனவிலங்கு அதிகாரிகள் தெரிவிக்கையில், சீனப் புத்தாண்டு நெருங்கி வருகிறது. இதையொட்டி, புத்தாண்டு ஸ்பெஷலாக, தென்அமெரிக்காவிலிருந்து அனகொண்டா பாம்பும், மேலும் இரண்டு பெரிய பாம்புகளையும் இங்குள்ள வனவிலங்குப் பூங்காவிற்குக் கொண்டு வந்துள்ளோம்.16 வயதான இந்த மூன்று பாம்புகளையும் 5 பேர் சேர்ந்து தூக்கி வந்தார்கள். என்றனர்.
விலங்கியல் பூங்கா துணைக் காப்பாளர் பிரான்சிஸ் லிம் கூறுகையில், உருவத்தை வைத்து அனகொண்டா பாம்புகளை எடை போடக் கூடாது. சினிமாவில்காட்டுவது போல, மனிதர்களையெல்லாம் அனகொண்டா பாம்புகள் சாப்பிடாது.ஒவ்வொரு அனகொண்டா பாம்பும் மாதத்திற்கு நான்கு கோழிகளைமட்டுமே உண்ணும்.
எதையும் சாப்பிடாமல், தங்கள் உடம்பில் உள்ள கொழுப்பு சத்து மூலம் மட்டும் ஒரு வருடம் வரை வாழும் ஆற்றல் பெற்றவை அனகொண்டாபாம்புகள். நாம் அவற்றை சீண்டாதவரை, அவை அமைதியானவையே. ஏதாவது செய்தால்தான் சிக்கல் வரும் என்றார்.
சீனாவில் எருது, புலி, முயல், பாம்பு, குதிரை, ஆடு, குரங்கு, நாய், பன்றி, எலி, பல்லி மற்றும் சேவல் ஆகியவற்றை வைத்தே சீன ராசிகள்அமைந்துள்ளன. இதை அடிப்படையாக வைத்தே சீன ஜோதிடம் இருக்கிறது. இந்த விலங்குகளை ராசியாகக் கொண்ட நபர்களுக்கு, அந்த விலங்குகளின்குணாதிசியங்களே இருக்கும் என்பது சீன நம்பிக்கை. 1000 வருடங்களாக இது பின்பற்றப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications