இலங்கை விழாவைக் கலக்கிய இந்திய யானை
இதோ தூண்கள் ரெடி ... யார் என்ன சொன்னால் எங்களுக்கு என்ன? நாங்கள் சொன்ன இடத்தில் கோயில் கட்டியேதீருவோம். இதில் குறுக்கிட நீதிமன்றத்திற்கு என்ன உரிமை இருக்கிறது.? பா.ஜ.க. அரசு கவிழ்ந்தால் கவிழட்டுமே?கோயில் கட்டுமானப் பணி இன்ன தேதியில் தொடங்கும். கட்டியே தீருவோம் என்றெல்லாம் வி.எச் பி., பஜ்ரங் தள்போன்ற அமைப்புகளின் தலைவர்கள் சவால் மழை பொழிந்து கொண்டே இருக்கிறார்கள்.
இதன் காரணமாக எழக்கூடிய துவேஷ வெள்ளத்தில், நாட்டின் அமைதி அடித்துக் கொண்டு போய் விடுமே என்றகவலை யாருக்குமே எழக் காணோம். இவர்களிடம் பேசி, நீதிமன்றத் தீர்ப்பு வருகிற வரையிலாவது அயோத்திபற்றி எதுவும் கூறுவதில்லை என்ற கருத்தை உருவாக்க, பாரதிய ஜனதா முயற்சி செய்யலாமே!
காஷ்மீர் தீவிரவாதிகளுடன் இந்திய அரசு பேச்சுவார்த்தை நடத்த முடியும்: ஹிந்துக்களின் பிரதிநிதிகளும்,முஸ்லிம்களின் பிரதிநிதிகளும் அமர்ந்து பேசி அயோத்தி பிரச்னைக்குத் தீர்வு காண முடியும்.
ஆனால் பா.ஜ.க.,வினால் இந்த ஹிந்து அமைப்புகளிடம் பேசி, அயோத்தி சவால்களை நீதிமன்றத் தீர்ப்புவரும்வரை தள்ளிப்போட முடியாதா? அது அல்லவா இப்போது உடனடியாக நடக்க வேண்டிய பேச்சு வார்த்தை!
சவால்கள் குவிந்து கொண்டே போனால், எதிர் தரப்பிலிருந்து பதில் சவால்களும் வளரும். இந்த ஒரு கட்டத்தில்,இரு தரப்பினருக்கும் கவுரவப் பிரச்னையாகி விடும்.
அதற்குப் பிறகு கொஞ்சம் விட்டுக் கொடுத்தாலும், அது கோழைத்தனமான பின் வாங்குதல் ஆகி விடும் என்றுநினைத்து, இரு தரப்பினரும் வறட்டுத் தனத்தை வளர்த்துக் கொள்வார்கள். பிடிவாதங்கள், மூர்க்கத்தனங்களாகமாறிவிடும். ஆகையால் இப்போதே இந்த அயோத்தி சவால்களைத் தவிர்ப்பது நல்லது.
பா.ஜ.க. தலைமை - தேவைப்பட்டால் ஆர்.எஸ்.எஸ்,.ஸின் உதவியோடு - அயோத்தி விவகாரத்தில் முனைந்துள்ளஹிந்து அமைப்புகளிடம் பேச்சு வார்த்தை நடத்த வேண்டும்.
அந்தப் பேச்சு வார்த்தை மூலம், கோயில் கட்டுகிற பணி துவங்குகிற தேதி அறிவிப்புகளுக்கு ஒரு நிறுத்தத்தைப்பெற வேண்டும்; தவிர, தூண்கள், மாடங்கள், விக்ரஹங்கள் போன்றவை கொண்டு வந்து குவிக்கப்படுவதைத்தடுக்கவும், அந்த பேச்சுவார்த்தைகளின் மூலம் வழி காண வேண்டும்; நீதிமன்றத் தீர்ப்பு வருகிற வரையில்,அயோத்தி பிரச்னை மேலும் உக்கிரமடைந்து விடாமல், அந்தப் பேச்சு வார்த்தைகளின் மூலம் பார்த்துக் கொள்ளவேண்டும்.
இப்படிச் செய்தால் நாட்டின் அமைதி குலையாமல் காப்பாற்றப்படும்: : பெரும் குழப்பம் விளைந்து விடாமல்தடுக்கப்படும்; மத்திய அரசுக்கு இருந்து வரும் ஒரு பெரும் தொல்லை தீரூம். இந்த முக்கோண நன்மையைஉடனடியாக காண, பா.ஜ.க. தலைமை முனைய வேண்டும்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications