6 பேருக்கு ரூ. 1.5 லட்சம் நஷ்ட ஈடு தர உத்தரவு
சென்னை:
போலீஸ் சப் இன்ஸ்பெக்டரால் அடித்துத் துன்புறுத்தப்பட்ட 6 பேருக்கு தலா ரூ. 25,000 நஷ்ட ஈடு தர வேண்டும்என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கன்னியாக்குமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் எட்வர்ட் மற்றும் செல்லப்பன். இவர்களுக்கிடையே, சில காலமாகநிலத்தகராறு இருந்து வந்துள்ளது. இதையடுத்து இருவரும் வழக்குத் தொடர்ந்தனர். வழக்கில் எட்வர்டுக்குச்சாதகமாக தீர்ப்பு வந்தது.
இதையடுத்து 1997-ம் ஆண்டு ஜூன் 5-ம் தேதி தனது நிலத்திற்குட்பட்ட பகுதியில் எட்வர்ட் மற்றும் அவரதுநண்பர்கள் வேலி அமைத்தனர். இதை எதிர்த்து செல்லப்பன் தரப்பினர் போலீஸில் புகார் கொடுத்தனர். இதனால்களியக்காவிளை சப் இன்ஸ்பெக்டர் செளந்தரபாண்டியன், எட்வர்ட் தரப்பினர் மீது முதல் தகவல் அறிக்கை(எப்.ஐ.ஆர்.) பதிவு செய்தார்.
இருப்பினும், எட்வர்ட் தரப்பினருக்கு கோர்ட் ஜாமீன் வழங்கியது. சப் இன்ஸ்பெக்டர் முன்பு அவர்கள் தினசரிஆஜராக வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. ஜூலை 9-ம் தேதி போலீஸ் நிலையத்திற்கு வந்த எட்வர்ட்தரப்பினரிடம் சப் இன்ஸ்பெக்டர் ஆத்திரப்பட்டுள்ளார். தன்னிடம் சொல்லாமல் கோர்ட்டுக்குப் போனதாக அவர்கூறியுள்ளார். அவர்களைத் தாக்கவும் செய்துள்ளார். இதில் ராபின்சன் என்பவர் இறந்து விட்டார்.
இதையடுத்து உயர்நீதிமன்றத்தில் 6 பேரும் மனு செய்தனர். மனுவை விசாரித்த நீதிபதி கற்பக விநாயகம், ஆறுபேருக்கும் இழப்பீடு தர உத்தரவிட்டார். மேலும், சப் இன்ஸ்பெக்டர் செளந்தரபாண்டியனுக்கு எதிராக துறைரீதியிலான விசாரணை நடத்தவும் மாவட்ட எஸ்.பி.க்கு உத்தரவிட்டார்.
நீதிபதி தனது தீர்ப்பில், சப் இன்ஸ்பெக்டருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கலாம் என்ற மாவட்ட வருவாய் அதிகாரிபரிந்துரை செய்துள்ளார். பொய்யான சான்றிதழ்களை சப் இன்ஸ்பெக்டர் கொடுத்ததாக அவர் கூறியுள்ளார்.சட்டத்தை அமல் செய்ய வேண்டிய அதிகாரியே, சட்டத்தைக் கையில் எடுத்துக் கொண்டு, செயல்பட்டதுகண்டிக்கத்தக்கது என்று கூறியிருந்தார்.
யு.என்.ஐ.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications