முதுகெலும்பு ஆபரேஷன் .. கோவைக்கு கிடைத்த கெளரவம்
கோவை:
இந்தியாவிலேயே முதல் முறையாக முதுகெலும்பு அறுவை சிகிச்சையில் உயர் பயிற்சிஅளிக்க கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுமதிகிடைத்துள்ளது.
கோவையிலுள்ள கங்கா மருத்துவ மனை "சூப்பர் ஸ்பெஷாலிட்டி ஃபெல்லோஷிப்என்ற பயிற்சி வகுப்பை துவங்கவுள்ளது. ஆண்டுக்கு ஒருவர் மட்டுமே இதில்சேர்க்கப்பட்டு பயிற்சி பெற முடியும்.
இது குறித்து மருத்துவமனையின் டாக்டர் ராஜசேகரன் நிருபர்களுக்கு அளித்தபேட்டியில் கூறியதாவது:
முதுகெலும்பின் வழியே முக்கிய நரம்புகள் செல்வதால் மிக முக்கியமான பகுதியாகஇது விளங்குகிறது. முதுகெலும்பு அறுவை சிகிச்சையின்போது மிக முக்கியமாகவும்நுட்பமாகவும் கவனம் செலுத்த வேண்டும்.
இதற்கென நுண் அறுவை சிகிச்சைக் கருவியும் மிகவும் பயன்படுத்த வேண்டும்.இதற்காக ரூ. 2 கோடி செலவில் கருவி நிறுவப்பட்டுள்ளது.
முதுகெலும்பு அறுவை சிகிச்சையைப் பொறுத்தவரை 90 சதவீதம் வெற்றி, 95 சதவீதம்வெற்றி என்றெல்லாம் கூற முடியாது. 100 சதவீதம் வெற்றி பெற்றால் தான் இந்தஅறுவை சிகிச்சை ழுமையானதாக இருக்கும். ஒரு சதவீதம் குறைவாக இருந்தாலும்,நோயாளிக்குப் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது.
எனவே, மிகவும் கவனமுடன் மேற்கொள்ள வேண்டிய இந்த அறுவை சிகிச்சைக்குஉயர் பயிற்சி அளிக்க மருத்துவமனைக்கு அனுமதி கிடைத்திருப்பது மிகவும்முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும். இதற்கு முன்பே சர்வதேச ஆர்த்தோபடிக்சொசைட்டி என்ற அமைப்பிடம் பயிற்சி வகுப்பு நடத்தத் தேவையான அனுமதிபெற்றுள்ளோம்.
தற்போது கிடைத்துள்ள இந்த பயிற்சிக்கான அனுமதியில் ஆண்டுக்கு ஒருவர் மட்டுமேபயிற்சி பெற முடியும். அதோடு, இந்தப் பயிற்சி பெற எலும்பு முறிவு மற்றும் அறுவைசிகிச்சையில் முதுநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
இங்கு அஜய் ஷெட்டி, சுகவனம் ஆகிய டாக்டர்கள் சிறப்பான மருத்துவ அனுபவமும்,பயிற்சி அளிக்கும் திறனும் பெற்றுள்ளனர். இதற்கு முன் இலங்கை, இந்தோனேஷியா,சீனா ஆகிய நாடுகளிலிருந்தும் டாக்டர்கள் சிகிச்சை பெற்றுள்ளனர் என்பதுகுறிப்பிடத்தக்கது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications