ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் ...

Subscribe to Oneindia Tamil

சிங்கப்பூர்:

மகனுக்கு வயலின் வாங்குவதற்காக தனது விலைமதிப்பற்ற வீட்டை விற்றார் சிங்கப்பூரைச் சேர்ந்த வர்த்தகர்ஒருவர்.

சிங்கப்பூரைச் சேர்ந்தவர் கே.ஒய்.வோங்க். பாங்காங்க் நகரில் இவர் ஒரு உற்பத்தி நிறுவனத்தை நடத்தி வருகிறார்.இவரது மகன் யூ கி (18), வயலின் வாசிப்பதில் நல்ல திறமை படைத்தவர். இங்கிலாந்தில் உள்ள மிகப் பிரபலமானயஹூதி மெனுஹி வயலின் பள்ளியில் படித்தவர். அங்கு நடந்த வயலின் தேர்வில் முதலாவதாக வந்தவர்.

இளம் வயதிலேயே இந்த சிறப்பை அடைந்த முதலாவது சிங்கப்பூர் குடிமகன் என்ற பெருமையும் யூ கிக்கு உண்டு.இந்த சிறப்பை அடைந்தபோது, யூ கிக்கு வயது 9 மட்டுமே.

தற்போது வியன்னாவிலுள்ள கோன்சர்வடேரியம் நகரில் பேராசிரியர் போரிஸ் குச்னிர் என்பவரிடம் வயலின்கற்றுக் கொண்டு வருகிறார் யூ கி. தனது திறமையை மேலும் வளர்க்க வேண்டுமானால், நல்ல வயலின் தேவைஎன்று தனது பெற்றோரிடம் கூறியுள்ளார் யூ கி.

இதையடுத்து தலைசிறந்த வயலினை மகனுக்கு வாங்கிக் கொடுக்க முடிவு செய்தார் தந்தை வோங்க். இத்தாலியில்லோரன்ஸோ ஸ்டோரியோனி என்பவர் தயாரிக்கும் வயலின்தான் சிறந்தது என்று தந்தைக்குத் தெரிவித்தார் யூ கி.

தனயன் சொல்லை மீறாத தந்தையும் அதற்கு முயற்சி செய்தார். ஆனால் விலை அதிகமாக இருந்தது.தயங்கவில்லை யோங்க். சிங்கப்பூரில் உள்ள தனது விலை மதிப்பற்ற வீட்டை விற்க முடிவு செய்தார். வீட்டையும்விற்றார். கிடைத்த பணத்தில் இத்தாலி வயலினை வாங்கினார். விலை அதிகமில்லை, 3,64,160 அமெரிக்கடாலர்கள் மட்டுமே (!).

இதுகுறித்து யோங்க் கூறுகையில், எனக்கு வேறு வழி தெரியவில்லை. எனது மகனின் கனவு மட்டுமே எனக்குமுக்கியம். விற்பதற்கு எனக்கு சிங்கப்பூரில் வேறு வீடும் இல்லை. கிடைத்த பணத்தில் சிரமப்பட்டு இந்த வயலினைவாங்கினேன் என்றார்.

தங்களது மகனுக்காக பல்வேறு தியாகங்களைச் செய்துள்ளனர் யோங்க்கும், அவரது ஜப்பானிய மனைவியும். யூகியின் நான்கு வயது முதலே இது தொடங்கி விட்டது. அவனது திறமையை மெருகூட்டுவதே தங்களது வாழ்க்கைலட்சியம் என்கிறார்கள் இந்த தம்பதிகள்.

இந்த வயலின் எனது மகனின் திறமையை மேலும் வளர்க்கும் என்று நம்புகிறேன். இதற்காக எந்த விலையையும்தாங்கிக் கொள்ள நான் தயார் என்கிறார் யோங்க்.

நியூயார்க் நகரிலுள்ள டீலர் மூலம் இந்த வயலினை வாங்கியுள்ளார் யோங்க். கடந்த வாரம் இந்த வயலினைக்கொண்டு, சிங்கப்பூர் சிம்போனி குழுவில் கலந்து கொண்டு வாசித்தார் யூ கி.

"ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+