கவர்னர் உரையில் ஒன்றுமில்லை .. ஜெ.
சென்னை:
தமிழக சட்டசபையில், கவர்னர் பாத்திமா பீவி ஆற்றிய உரையில் குறிப்பிடும் வகையில் எதுவும் இல்லை என்று அ.தி.மு.க.பொதுச்செயலாளர் ஜெயலலிதாவெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
ஜெயலலிதாவின் இந்தக் கருத்தை பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் தி.மு.க. கூட்டணியில் உள்ள பிற கட்சிகளும் வரவேற்றுள்ளன.
கவர்னர் உரை குறித்து ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை:
தென் மாவட்டங்களில் ஜாதிக் கலவரங்கள் தலைவிரித்தாடுகின்றன. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நிலைமை சீரமைக்கப்பட வேண்டும்.இதைப்பற்றியெல்லாம் கவர்னர் உரையில் எதுவும் கூறவில்லை.
சந்தனக் கடத்தல் வீரப்பனைப் பிடிப்பதற்கான முயற்சியில் ஈடுபடாமல் மாநில அரசு வீரப்பனுக்குப் போலீஸ் பாதுகாப்பு கொடுக்கும் வகையில்நடக்கிறது.
தமிழகத்தில் திமுக ஆட்சியின் நிர்வாக திறமையின்மையை மூடி மறைக்கும் விதத்தில் கவர்னர் உரை அமைந்துள்ளது என்று தனது உரையில் கூறியுள்ளார்.
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், எதிர்கட்சித் தலைவருமான சோ.பாலகிருஷ்ணன் கூறுகையில், தமிழக சட்டசபையில் கவர்னர் ஆற்றியஉரையில் பல்வேறு நலத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இவை ஒன்றும் பொதுமக்களுக்குப் பயனளிக்கும் வகையில் இல்லை என்றார்.
கம்யூனிஸ்ட் கட்சிகள் கவர்னர் உரை குறித்துக் கூறுகையில், தமிழகத்தில் நலிந்து கிடைக்கும் தொழிற்சாலைகளை முன்னேற்ற தமிழக அரசு எந்தநடவடிக்கையும் எடுக்கவில்லை. படித்து வேலையில்லாத இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் விதத்தில் கவர்னர் உரையில் நலத்திட்டங்கள் இல்லைஎன்று குற்றம்சாட்டியுள்ளது.
கவர்னர் உரை குறித்து பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் ஜி.கே.மணி கூறுகையில், தமிழக அரசு விவசாயிகள், நெசவுத் தொழிலாளர்கள் மற்றும்மீனவர்களின் பிரச்சனைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
10 ம் வகுப்பு வரை கட்டாயக் கல்வி முறையை அமல்படுத்த வேண்டும் அல்லது 8 ம் வகுப்பு வரையாவது கட்டாயக் கல்வி முறை திட்டத்தைஅமல்படுத்த வேண்டும். இவையெல்லாம் எதுவும் கவர்னர் உரையில் இல்லை என்றார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications