60 இடங்களில் வெற்றி பெறுவோம் .. பா.ஜ.க.

Subscribe to Oneindia Tamil

கோவை:

தமிழகத்தில் வரும் சட்டசபைத் தேர்தலில் எங்களுக்கு 60 இடங்கள் கிடைக்கும் என தமிழ்நாடு பாரதிய ஜனதாக் கட்சியின் பொதுச் செயலாளர் இல.கணேசன் தெரிவித்தார்.

சட்டசபைத் தேர்தல் நெருங்குவதையொட்டி, பா.ஜ.க. பூர்வாங்கப் பணிகளைத் துவக்கியுள்ளது. முதல் கட்ட ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்ளகோவைக்கு தமிழ்நாடு பாரதிய ஜனதாக் கட்சியின் பொதுச் செயலர் இல.கணேசன் கோவை வந்திருந்தார்.

அங்கு நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், தமிழ்நாட்டில் அடுத்து வரும் தேர்தலில் பாரதிய ஜனதாவுக்கு செல்வாக்குள்ள தொகுதிகள் என 60 தொகுதிகள்கண்டறியப்பட்டுள்ளது. இந்த தொகுதிகளில் பாரதிய ஜனதா, கூட்டணியின் இட ஒதுக்கீட்டிற்கு ஏற்ப போட்டியிடும்.

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள சிறு பூசல் விரைவில் தீர்க்கப்படும். பாட்டாளி மக்கள் கட்சியும், தமிழ ராஜீவ் காங்கிரஸ் கட்சியும் இதில்கட்டாயம் இடம் பெறும். ராமதாஸ் இந்த அணியில் தொடர்ந்து நீடிப்பார். அ.தி.மு.க செய்த ஊழல்களை மக்கள் மறந்து விடவில்லை.

இதனை அவர்கள் நன்கு அறிந்துள்ளனர். அக்கட்சி மீண்டும் ஆட்சிக்கு வராது. மேலும், கூட்டணி ஆட்சிக்கு வாய்ப்பு இல்லை என அறிவித்திருப்பதால்,எந்தக் கட்சியும் கூட்டணி வைத்துக் கொள்ளத் தயங்கி வருகின்றன.

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தி.மு.க தான் ஆட்சி அமைக்கும். இதில் பாரதிய ஜனதா இடம் பெறுமா என்ற யூகத்தின் அடிப்படையிலான கேள்விக்குபதில் அளிக்க இயலாது என்றார் இல.கணேசன்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+