23 சிறுவர், சிறுமியருக்கு பிரதமரின் வீர விருது
டெல்லி:
வீர, தீர செயல்கள் புரிந்த 23 சிறுவர், சிறுமியருக்கு பிரதமரின் வீர விருதுவழங்கப்படுகிறது.
இந்த சிறுவர்கள், சிறுமிகள். தங்களுடன் வாழும் உடன்பிறவா சகோதர, சகோதரிகளைகாப்பாற்றி பெருமை சேர்த்துள்ளார்கள். 18 சிறுவர்களும், 5 சிறுமிகளும் தாங்கள்செய்த தைரியமிகுந்த செயல்களுக்காக இந்த மாதம் 23-ம் தேதி பிரதமர்வாஜ்பாயிடமிருந்து வீர விருது பெறவிருக்கிறார்கள்.
உத்திரபிரதேசத்தைச் சேர்ந்த மூன்று வயதான சிறுமி பாரல் மிஸ்ரா எரிக்கும் தணலில்தன் உயிரையும் பொருட்படுத்தாமல் தன் தோழியை காப்பாற்றியதற்காக விருதுபெறுகிறாள்.
காஷ்மீரின் தோடா கிராமத்தை சேர்ந்த 12 வயதான சுனில் சிங்கும், 13 வயதானமுகேஷ் குமாரும் தங்கள் கிராமத்தை தாக்க வந்த தீவிரவாதிகளை எதிர்த்துபோராடியதற்காக பாரத் விருது பெறுகிறார்கள்.
தன் வீட்டை கொள்ளையடிக்க வந்த கொள்ளையர்களிடம் தனியாக போராடிகொள்ளை முயற்சியை முறியடித்ததற்காக அம்பாலா நகரைச் சேர்ந்த ஹேனா பக்ஷிஎன்ற சிறுமிக்கு கீதா சோப்ரா விருது வழங்கப்படுகிறது.
பீகாரின் கயாவைச் சேர்ந்த பிரனேஸ் குமார் என்ற சிறுவன் ஆயுதம் தாங்கியகொள்ளையர்களை எதிர்த்து போராடியதற்காக சஞ்சய் சோப்ரா விருது பெறுகிறான்.
இது குறித்து அந்த சிறுவனது தந்தை கூறுகையில், மிகச் சிறு வயது முதலே குமாருக்குதுணிவு அதிகம். அவன் கடவுளைத் தவிர யாருக்கும் பயந்ததில்லை என கூறினார்.
மேகாலயாவின் ஹான்போக்லாங் நாங்சியஜுக்கு 9 மாத குழந்தையை எரியும்வீட்டிலிருந்து காப்பாற்றியதற்காக பாபு காயாதனி விருது வழங்கப்படுகிறது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications