வக்கீல் சாவு.. சி.பி.ஐ. விசாரணை கோரி வழக்கு
சென்னை:
சென்னையைச் சேர்ந்த பெண் வக்கீல் தாரகேஸ்வரியின் மர்ம சாவு குறித்து சந்தேகம்எழுப்பி தொடரப்பட்ட மனுவை, சென்னை உயர் நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டுள்ளது.
தாரகேஸ்வரி என்ற வக்கீல் சென்ற ஆண்டு நவம்பர் தற்கொலை செய்து கொண்டுஇறந்ததாக கூறப்பட்டது. இதில் மர்மம் இருப்பதாக அவரது சித்தி மணி நேமிநாதன்சென்னை உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
தனது மனுவில் அவர் கூறியிருந்ததாவது:
தாரகேசுவரி, பாலாஜி என்ற வக்கீலை 1998-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் திருமணம்செய்து கொண்டார். 1999-ம் ஆண்டு அக்டோபர் மாதம் அவர்களுக்கு குழந்தைபிறந்தது.
நவம்பர் மாதம் 23-ம் ததி திரு.வி.க. நகர் போலீஸ், அரும்பாக்கத்தில் இருக்கும் என்வீட்டிற்கு வந்து எனது மகள் இறந்து விட்டதாக கூறினர். தாரகேசுவரி தீக்குளித்துதற்கெலை செய்து கொண்டதாக சிலர் கூறினர்.
தாசில்தார் விசாரணையின்போது நான் தாரகேசுவரியின் சாவில் மர்மம் இருப்பதாககூறினேன். தாரகேசுவரியை அவளது கணவரும், மைத்துனர்களுமே கொன்றிருக்கவேண்டும் என்ற என் சந்தேகத்தையும் கூறினேன்.
முதல் தகவல் அறிக்கை (எப்.ஐ.ஆர்) கூட ஒரு கண்துடைப்புதான். பிரேத பரிசோதனைஅறிக்கை தாரகேசுவரி மூச்சு திணறி, கழுத்தை நெரிக்கப்பட்டு இறந்துள்ளதாகதெரிவித்தள்ளது. மேலும் உடலில் காயங்களும் இருந்தன. இதனால் தாரகேசுவரிதற்கொலை செய்து கொள்ளவில்லை கொலை செய்யப்ட்டுள்ளார் என்பதுதெளிவாகிறது.
போலீஸ் விசாரணையை நிறுத்தி சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனகேட்டுக் கொண்டிருந்தார்.
இந்த மனு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி மலை சுப்ரமணியம் முன் விசாரணைக்குவந்தது.
மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதிபதி மலை சுப்ரமணியன், செம்பியம்துணை கமிஷனர், அண்ணா நகர் துணை கமிஷனர் மற்றும் சி.பி.ஐ. இணை இயக்குனர்ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications