மருத்துவக் கல்லூரி மாணவர் இடம் .. கம்யூனிஸ்ட் கோரிக்கை
Subscribe to Oneindia Tamil
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரி மாணவர்களுக்கு யூனியன் பிரதேசத்தில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரிகளில் வழங்கபட்டுவரும் மாணவர் இடங்களின் எண்ணிக்கையைக் குறைத்திருப்பதற்கு மாநில மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகண்டனம் தெரிவித்துள்ளது.
கட்சியின் மாநிலச் செயலாளர் டி.முருகன் வெளியிட்ட ஒரு அறிக்கையில், திமுக ஆட்சி இருந்தபோது, இரண்டுதனியார் மருத்துவக் கல்லூரிகள் துவங்குவதற்கு அனுமதி அளிக்கப்பட்டது. அனுமதி வழங்கும்போது, 50 சதவீதஇடங்கள் உள்ளூர் மாணவர்களுக்கே வழங்கப்பட வேண்டும் என்று உறுதிமொழி பெறப்பட்டது.
ஆனால் இந்த நடைமுறை பின்பற்றப்படுவதேயில்லை. 50 சதவீதம் என்ற அளவிலிருந்து 25 சதவீதமாக இதுகுறைந்து விட்டது. இதற்கு மாநில துணை நிலை ஆளுநரும் அனுமதி கொடுத்துள்ளார். இது கண்டிக்கத்தக்கது.
50 சதவீத இடஒதுக்கீட்டு முறையை முறையை அமல்படுத்த வேண்டும் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications