வரி முறைகேடு .. மாநகராட்சி ஊழியர் நீக்கம்
கோவை:
வரி விதிப்பில் முறைகேடு செய்த கோவை மாநகராட்சி ஊழியர் சஸ்பெண்ட் (தற்காலிக பதவி நீக்கம்) செய்யப்பட்டார்.
கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலத்தில் வருவாய் அதிகாரியாகப் பணியாற்றியவர் ராஜூ பிரபாகர். இவர் அந்தப் பகுதியில் உள்ள ஒரு புகழ் மிக்கடெக்ஸ்டைல் மில் ஒன்றின் வரி விதிப்பில் லஞ்சம் பெற்றுக் கொண்டு முறைகேடாகச் செயல்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதனால் மாநகராட்சிக்கு ரூ. 1.25 லட்ச ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து கோவை மாநகராட்சியின் கிழக்கு மண்டல உதவிஆணையாளர் செல்வராஜ், மாநகராட்சி கமிஷனருக்கு தெரிவித்தார்.
இதன் அடிப்படையில் கோவை மாநகராட்சி கமிஷனர் ஹிதேஷ்குமார் மக்வானா, மேற்கொண்ட விசாரணையில், வருவாய் இழப்பு உறுதி செய்யப்பட்டது.இதையடுத்து ராஜூ பிரபாகர் மற்றும் கிழக்கு மண்டலத்தில் பணியாற்றிய நூர்ஜஹான் என்ற பெண் ஆகியோரை சஸ்பெண்ட் செய்து மாநகராட்சி கமிஷனர்ஹிதேஷ்குமார் மக்வானா உத்தரவிட்டார்.
மேலும், கோவை வடக்கு மண்டலத்தில் பணியாற்றிய நகரமைப்பு அலுவலர் லட்சுமி நாராயணன் என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு லஞ்ச ஒழிப்புதுறையினரால் கைது செய்யப்பட்டார். அவர் தற்போது பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மாநகராட்சி கமிஷனராக பொறுப்பேற்ற சில மாதங்களில்ஹிதேஸ்குமார் மக்வானா மேற்கொண்ட பல அதிரடி நடவடிக்கைகளில் இதுவரை 5 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
பொதுமக்களிடமிருந்து வந்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய கமிஷனர், இந்த அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications