துபாய் விபத்தில் 5 இந்தியர்கள் சாவு
துபாய்:
துபாய் அருகே அபுதாபியில் வியாழக்கிழமை நடந்த டிரக் விபத்தில் ஐந்து இந்தியர்கள் உயிரிழந்தார்கள்.
ஐந்து இந்தியர்களும் வந்த வாகனம் மீது டிரக் மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டது. ருவைஸ் என்ற இடத்தில்அதிகாலை இந்த விபத்து நடந்தது. பனிமூட்டம் காரணமாக எதிரில் வந்த வாகனம் தெரியாமல் டிரக் மோதியதாகபோலீஸார் தெரிவித்தனர்.
இறந்தவர்களில் கேரளாவைச் சேர்ந்த ஆதர்ஷ் என்பவர் மட்டும் அடையாளம் காணப்பட்டார். மற்றவர்கள்ஆந்திராவைச் சேர்ந்தவர்கள் என்று தெரிகிறது.
இதேபோல, துபாய்-அதாபி சாலையில் நடந்த மற்றொரு விபத்தில் 5 பேர் இறந்தனர். 25 பேர் காயமடைந்தனர்.விபத்தில் சிக்கிய அனைவரும் மெக்காவில் உம்ரா கடமையை முடித்துக் கொண்டு வந்தவர்கள். அவர்கள் வந்தவேன், பிரேக் பிடிக்காமல் மோதியது.
இறந்தவர்களில் 4 பேர் ஐக்கிய அரபு எமிரேட்டைச் சேர்ந்தவர்கள். ஒருவர் செளதி அரேபியாவைச் சேர்ந்தவர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications