காங்கோ அதிபரானார் கபிலாவின் மகன்
Subscribe to Oneindia Tamil
கின்ஸாஸா:
காங்கோ நாட்டின் புதிய அதிபராக சுட்டுக் கொல்லப்பட்ட அதிபர் லாரண்ட் கபிலாவின் மகனும், ராணுவ தளபதியுமான ஜோசப் கபிலாபொறுப்பேற்றுள்ளார்.
காங்கோ அதிபர் கபிலா 2 நாட்களுக்கு அவரது பாதுகாவலரால் சுடப்பட்டார். முதலில் அவர் இறந்து விட்டதாக பெல்ஜியம் வெளியுறவுத்துறைஅமைச்சர் தெரிவித்தார். ஆனால் காங்கோ இதை மறுத்தது. கபிலா இறக்கவில்லை எனவும், அவர் சிகிச்சைக்காக ஜிம்பாப்வேக்கு விமானத்தில்கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் தற்போது கபிலா இறந்து விட்டதை காங்கோ உறுதி செய்துள்ளது. ஜிம்பாப்வேக்குக் கொண்டு செல்லப்படும் வழியில் அவர் இறந்ததாககாங்கோ தெரிவித்துள்ளது.
தற்போது காங்கோவின் புதிய அதிபராக கபிலாவின் மகன் ஜோசப் கபிலா பொறுப்பேற்றுள்ளார்.












Click it and Unblock the Notifications