போராட்டம் நடத்துகிறது கம்மவார் நாயுடு சங்கம்
கோவை:
கம்மவார் நாயுடு இனத்தை பிற்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என மீண்டும்வலியுறுத்தி போராட்டம் நடத்தப் போவதாக சங்கத்தின் நிர்வாகக் குழுக் கூட்டத்தில்முடிவு செய்யப்பட்டது.
தமிழ்நாடு கம்மவார் நாயுடு சங்கத்தின் தமிழ்நாடு நிர்வாகக் குழுக் கூட்டம்உடுமலையில் நடந்தது. இந்தக் கூட்டத்தில், பிற்பட்டோர் பட்டியலில் கம்மவார் நாயுடுஇனத்தைச் சேர்க்க வேண்டும் என பல ஆண்டுகளாகக் கோரிக்கை வைத்துவருகிறோம். ஆனால் எந்த ஆட்சியும் கண்டு கொள்வதாகத் தெரியவில்லை.
இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி இளைஞர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திவருகிறோம். இந்தக் கோரிக்கையை தீவிரப்படுத்தவும், அரசியல் கட்சிகளின்கவனத்தைக் கவரவும், பிப்ரவரி மாதம் கடைசி வாரத்தில் சென்னையில் எழுச்சி மிகுமாநாடும், பேரணியும் நடத்த திட்டமிட்டுள்ளோம்.
இந்த மாநாட்டையொட்டி நடக்கும் நிர்வாகக் குழுக் கூட்டத்தில், தேர்தலில் எந்தக்கட்சிக்கு ஆதரவு அளிப்பது என்பது குறித்து முடிவு செய்யப்படும் என தீர்மானங்கள்நிறைவேற்றப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications