தாய்லாந்தில் கல்யாணம் .. மலேசியாவில் தலைமறைவு
கோலாலம்பூர்:
தாய்லாந்தில் இரண்டு பெண்களை ஒரே நேரத்தில் திருமணம் செய்து கொண்ட வாலிபர் தனது சொந்த நாடான மலேசியாவில் மதவாதிகளின் சர்ச்சைக்குஉள்ளாகியிருக்கிறார்.
மலேசியாவில் உள்ள முஸ்லீம் மதத்தினர், இந்தத் திருமணம் செல்லாது. இது சட்டத்தை அவமதிப்பது போன்றதாகும் என்று கூறியுள்ளனர்.
அப்துல் மொயின் ஜனவரி 11 ம் தேதி இரண்டு பெண்களைத் திருமணம் செய்து கொண்டார். தோழிகளான சுஹைதா (23) மற்றும் ரோஹாயா ரோகில் (25)ஆகிய இருவரும் அப்துலைக் காதலித்தனர்.
தோழிகள் இருவரும் இவரது வேனில்தான் வேலைக்குச் செல்வார்கள். இவர் வேன் டிரைவராகப் பணிபுரிந்தார். இரு பெண்கள் தன்னைக் காதலிப்பதைத்தெரிந்து கொண்ட இவர் இருவர் மனதையும் புண்படுத்த விரும்பவில்லை.
அதனால் இருவரையும் திருமணம் செய்து கொண்டார். மலேசிய நாட்டு முஸ்லீம் மதச் சட்டப்படி ஒரு ஆண் 4 பெண்களைத் திருமணம் செய்து கொள்ளலாம். ஆனால்அப்துலோ மலேசிய அதிகாரிகளிடம் அனுமதி பெறாமலேயே இரண்டு பெண்களைத் திருமணம் செய்து கொண்டது பெரும் சர்ச்சையைக் கிளப்பி விட்டுள்ளது.
கெடாஹ் இஸ்லாமிய அமைப்பு தலைவர் ஷேக் யஹாயா கூறுகையில், தாய்லாந்தில், மலேசியாவைச் சேர்ந்த ஒருவர் இரண்டு திருமணம் செய்து கொண்டதாகவும்,மலேசிய முஸ்லீம் மத அதிகாரிகளிடம் முறையான அனுமதி பெறவில்லை எனவும் எனக்குப் புகார் வந்தது. இதையடுத்து அவர் மேல் சட்டப்படி நடவடிக்கைஎடுக்க தீர்மானித்துள்ளோம் என்றார்.
கெடாஹ் இஸ்லாமிக் மத அதிகாரிகள், இரண்டு பெண்களைத் திருமணம் செய்து கொண்ட அப்துல் மொயின் ஹமீதைத் வலைவீசித் தேடி வருகின்றனர். அவர்கள்கூறுகையில், மலேசிய அதிகாரிகளிடம் அப்துல் அனுமதி பெறாமலேயே 2 திருமணம் செய்து கொண்டார் என்றனர்.
இவரது இரண்டு மனைவிகளுக்கும் தற்போது 6 மாத கால தண்டனை அளிக்கப்படும் அல்லது கடுமையான அபராதம் விதிக்கப்படும் என்றுதெரிகிறது.












Click it and Unblock the Notifications