மசூதி கொலை ..சிறப்புப் போலீஸ் விசாரணைக்கு உத்தரவு
சென்னை:
திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையம் மசூதியில் நடந்த கொலை தொடர்பாக, சி.பி.சி.ஐ.டி. போலீஸ்விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தமிழக முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
டிசம்பர் 9-ம் தேதி மேலப்பாளையம் மசூதியில்,ஒருவர் கொல்லப்பட்டார். இதைத் தொடர்ந்து திருநெல்வேலியில்பதற்றம் ஏற்பட்டது. இந்த நிலையில், கொலையாளி என்று கூறி கொல்லப்பட்டவரின் மகனைப் போலீஸார் கைதுசெய்தனர். தனது காதல் திருமணத்திற்கு தந்தை ஒத்துக்கொள்ளாததால்தான் மகனே இந்தக் கொலையைச் செய்தார்என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், தற்போது சிறப்புப் போலீஸ் விசாரணைக்கு தமிழக முதல்வர் உத்தரவிட்டிருப்பது முக்கியத்துவம்பெற்றுள்ளது.
சம்பவம் நடந்த அன்று, கொலை செய்யப்பட்ட அப்துல் ரஷீத், மசூதிக்குள் ரம்ஜான் விருந்து தயாரித்துக்கொண்டிருந்தார். அப்போது சிலர் வெளியிலிருந்து மசூதிக்குள் குண்டுகளை வீசியும், கத்தியால் குறித்து விட்டும்தப்பினர். இதில் ரஷீத் படுகாயமடைந்து இறந்தார்.
இதேபோல, மேலப்பாளையத்தில் ஜனவரி 11-ம் தேதி நடந்த கலவரத்தில், இறந்த சத்யசீலன் என்பவரின் கொலை,தென்காசியிலுள்ள நாடுபட்டி மொஹைதீன் மசூதியின் குடிசை எரிந்தது குறித்தும் தனிப் படை போலீஸார்விசாரணைக்கு முதல்வர் உத்தரவிட்டார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications