மனிதனை மாற்றியவை மதங்களே .. ஆர்.வி. கூறுகிறார்

Subscribe to Oneindia Tamil

கோவை:

காட்டுமிராண்டிகளாக இருந்தவர்களை, மனிதர்களாக மாற்றிய பெருமை மதங்களையே சாரும் என முன்னாள்குடியரசுத் தலைவர் ஆர். வெங்கட்ராமன் தெரிவித்தார்.

கோவையில் நடந்த பாரதிய வித்யாபவன் விழாவில் முன்னாள் குடியரசுத் தலைவர் வெங்கட்ராமன் கலந்துகொண்டு பேசியதாவது:

பண்பாடு என்பது பழங்காலந் தொட்டு உருவானது. இந்தப் பண்பாட்டிற்கு முக்கிய காரணமாக விளங்கியதுமதங்கள் தான். பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய இந்த மதங்கள் மனிதனை நல்வழிப்படுத்தியுள்ளன.

சரியானது எது, தவறு எது என்பதை இனம் பிரித்து அறிய வைத்துள்ளன. மதம் தான் மனிதனை சிந்திக்க வைத்துமனிதர்களாக அவர்களை மாற்றியுள்ளது. எல்லா மதங்களுமே அன்பைத் தான் போதித்துள்ளன.

கிறிஸ்துவ மதம், இஸ்லாமிய மதம், பெளத்தமதம் என எதிலுமே வன்முறை போதிக்கப்படவில்லை. இஸ்லாம்மதம் சகிப்புத் தன்மை இல்லாத மதம் எனச் சொல்வது தவறு. குரானை முழுமையாகப் படித்தவர்கள் யாரும்அப்படிச் சொல்ல மாட்டார்கள்.

குரானின் 109வது அத்தியாயத்தில், நபிகள் நாயகம், "நீங்கள் உங்கள் மதத்தை பின்பற்றுங்கள், நான் என் மதத்தைபின்பற்றுகிறேன் என கூறியுள்ளார்.

எனவே மதமாற்றத்தையும் கூட அவர் தீர்க்க தரிசனமாகக் கூறியுள்ளார். கருத்து வேறுபாடுகள் பல்வேறுமதங்களுக்கு இடையே இருக்கலாம். ஆனால் அவை எல்லாம் ஒரே அடிப்படையைத் தான் கொண்டுள்ளன.சகோதரத்துவத்தைப் போதிப்பதனால், புதிய நட்பு மட்டுமே உருவாவதில்லை. இதனால் கடவுளையும்ஆன்மாவையும் உணர முடியும் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+