ஜெ. தேர்தலில் நிற்க வாய்ப்பேயில்லை .. சுவாமி
சென்னை:
தமிழக சட்டசபைத் தேர்தலில் அ.தி.மு.க.பொதுச்செயலாளர் ஜெயலலிதாவால் போட்டியிட முடியாது என்று ஜனதாகட்சித் தலைவர் சுப்ரமணியசாமி கூறினார்.
சென்னையில் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
ஊழல் வழக்கில் 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை பெற்றுள்ள ஜெயலலிதாவால் தேர்தலில் போட்டியிடமுடியாது. ஜெயலலிதாவுக்கு சட்டம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
ஜெயலலிதாவின் வேட்புமனு நிராகரிக்கப்படுமானால் தேர்தல் கமிஷனுக்கு எதிராக ஜெயலலிதாவால் புகார்கொடுக்க முடியாது.
தமிழகத்தில் கூட்டணி ஆட்சிதான் அமையும் என்றார் சுப்ரமணியசாமி.
கில் கருத்து:
ஒருவர் மீது நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டால் அவர் தேர்தலில் போட்டியிடத் தடைவிதிக்க வேண்டும் என்று தலைமை தேர்தல் கமிஷனர் கில் டெல்லியில் வியாழக்கிழமை தெரிவித்திருந்தார்.கில்லின் இந்த யோசனை, தமிழக சட்டசபைத் தேர்தலில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தும் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.
கிரிமினல் வழக்கில் ஒருவர் 2 ஆண்டுகள் தண்டனை பெற்றால் அவருக்கு 6 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத்தடை விதிக்க சட்டத்தில் இடம் உள்ளது.
இந்த நிலையில், தற்போது 3 ஊழல் வழக்குகளில் தண்டனை பெற்றுள்ள ஜெயலலிதா தேர்தலில் போட்டியிடமுடியுமா என்பது கேள்விக்குறியாகியுள்ளது. கிரிமினல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருக்கும் ஒருவர் தேர்தலில்போட்டியிட அனுமதிக்கக் கூடாது என்று தலைமை தேர்தல் கமிஷனர் கில் கூறியிருப்பதைத் தொடர்ந்து,ஜெயலலிதா தேர்தலில் போட்டியிட முடியுமா என்பது புதிராகியுள்ளது.












Click it and Unblock the Notifications