தேர்தல் கூட்டணி .. குழு அமைக்கிறது த.மா.கா.
சென்னை:
தேர்தல் கூட்டணி குறித்து முடிவெடுப்பதற்காக தேர்தல் பணிக்குழு அமைக்க தமிழ் மாநில காங்கிரஸ் அரசியல்விவகாரக் குழுவில் முடிவெடுக்கப்பட்டது.
தமிழக சட்டசபைக்கு இன்னும் 3 மாதங்களில் தேர்தல் வரவிருக்கிறது. இந்நிலையில் தேர்தலில் வெற்றி பெற்றால்கூட்டணி ஆட்சி அமைக்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் கூறி வருகிறது.
ஆனால் கூட்டணி ஆட்சியை தமிழக மக்கள் ஏற்க மாட்டார்கள். விரும்பவும் மாட்டார்கள் என்றுஅ.தி.மு.க.பொதுச்செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
இதனால் தேர்தல் கூட்டணி அமைப்பதில் அ.தி.மு.க., த.மா.கா. கட்சிகளிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே த.மா.கா. அரசியல் விவகாரக்குழு மற்றும் முக்கிய நிர்வாகிகள் கூட்டம் சென்னை சத்யமூர்த்திபவனில் வியாழக்கிழமை மாலை நடைபெற்றது. கூட்டத்திற்கு த.மா.கா. தலைவர் மூப்பனார் தலைமை தாங்கினார்.கூட்டத்தில் கலந்து கொண்ட தலைவர்கள் தங்களுக்குத் தோன்றிய கருத்துக்களைத் தெரிவித்தார்கள்.
கூட்டம் முடிந்ததும் செய்தித் தொடர்பாளர் ஞானதேசிகன் நிருபர்களிடம் கூறியதாவது:
த.மா.கா.கட்சியின் அரசியல் விவகாரக்குழுக் கூட்டம் மூப்பனார் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் கலந்துகொண்ட பல்வேறு நிர்வாகிகள் தங்கள் கருத்துக்களைத் தெரிவித்தார்கள்.
வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தல் தொடர்பாக சகல பணிகளையும் திட்டமிட்டு செயல்படுத்த தேர்தல் பணிக்குழுஅமைக்கப்படும். அந்தக் குழுவை அமைக்க மூப்பனாருக்கு இக்கூட்டம் அதிகாரம் அளிக்கிறது என்ற தீர்மானம்கூட்டத்தில் எடுக்கப்பட்டது.
தேர்தல் பணிக்குழுவினர் கூட்டணி குறித்தும் முடிவெடுப்பார்கள். தேர்தல் பணிக்குழுவில் இடம்பெறும்உறுப்பினர்கள் பெயரை மூப்பனார் விரைவில் அறிவிப்பார்கள் என்றார்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications