ஊழலை எப்படி ஒழிக்கலாம்?
சென்னை:
அரசு அலுவலகங்கள் மற்றும் தனியார் அலுவலகங்களில் வேலை செய்து, ஆண்டுக்கு ரூ. 2 லட்சம் வரை வருமானம் ஈட்டுபவர்களுக்கு வருமான வரிவிலக்கு அளித்தால் ஊழலை தடுக்கலாம் என்று ஊழல் கண்காணிப்பு ஆணையத் தலைவர் விட்டல் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
சென்னையில் நடந்த அகில இந்திய அளிலான கருத்தரங்கு ஒன்றைத் துவக்கி வைத்து அவர் பேசியதாவது:
அரசு அலுவலகங்கள் மற்றும் தனியார் அலுவலகங்களில் வருடத்திற்கு 2 லட்சம் வரை வருமானம் ஈட்டும் ஊழியர்களுக்கு 20 சதவீத வரி மட்டுமேவிதிக்க வேண்டும்.
தனி நபர் வருமானத்தில் 20 சதவீதம் கருப்பு பணமாகத்தான் உள்ளது. அரசு அலுவலகங்களில் நிர்வாகங்கள் சரியாக செயல்பட வேண்டுமெனில் ஒழுங்கானநெறிமுறைகளை வகுத்து செயல்பட வேண்டும்.
வங்கிகளில் முதலீடு செய்யப்பட்டிருக்கும் ரூ 58,000 கோடிக்கும் மேலான சொத்துக்கள் பயன்படுத்தப்படாமல் இருக்கின்றன. வங்கிகள் ரகசிய காப்புசட்டத்தில் சில திருத்தங்கள் செய்ய வேண்டும். இதன் மூலம், இன்டர்நெட் மூலம் கடன் வாங்கி விட்டு கட்டாமல் விடுபவர்களை பகிரங்கப்படுத்தலாம்என்றார் விட்டல்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications