குடியரசு தின விழா .. அணிவகுப்பில் 2000 மாணவர்கள்
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
இந்தியாவின் 51 வது குடியரசு தினமான ஜனவரி 26 ம் தேதி நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 2000 பள்ளிக் குழந்தைகள்டெல்லியிலுள்ள ராஜ்பாத் சாலையில் அணிவகுப்பு நடத்துவார்கள்.
இந்திய கலாச்சாரம், தேசிய ஒருமைப்பாடு போன்றவற்றை விளக்கும் நிகழச்சிகளை இவர்கள் அணிவகுப்பின்போது செய்து காட்டுவார்கள்.டெல்லியிலிருந்து 6 பள்ளியைச் சேர்ந்த குழந்தைகளும், அலகாபாத், இம்பால், நாக்பூர் மற்றும் திருச்சூரிலிருந்து தலா ஒரு பள்ளியின் குழந்தைகளும் இதில்பங்கேற்கிறார்கள்.
கேரளா மற்றும் மணிப்பூர் பள்ளிக் குழந்தைகள் தங்கள் மாநில பாரம்பரிய கலைநிகழ்ச்சிகளை நடத்திக் காட்டுவார்கள்.
புதிதாக உருவாக்கப்பட்டுள்ள சட்டீஸ்கர், உத்தராஞ்சல் மாநிலங்களிலிருந்து வரும் பள்ளிக்குழந்தைகளும் நாட்டிய நிகழ்ச்சிகள் நடத்துவார்கள்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications