அதிபராகப் பதவியேற்றார் ஜார்ஜ் புஷ் ஜூனியர்
வாஷிங்டன்:
அமெரிக்காவின் 43-வது அதிபராக ஜார்ஜ் வாக்கர் புஷ் சனிக்கிழமை நடந்த எளிமையான விழாவில்பதவியேற்றுக் கொண்டார்.
தந்தைக்குப் பின் அதிபர் பதவிக்கு வரும் இரண்டாவது மகன் புஷ் ஜூனியர் என்பது குறிப்பிடத்தக்கது. முன்புஜான் ஆடம்ஸும், அவருக்குப் பின் அவரது மகன் ஜான் குவின்சி ஆடம்சும் அதிபராக இருந்துள்ளனர். அந்தவரிசையில், ஜார்ஜ் புஷ்ஷுக்குப் பிறகு அவரது மகன் புஷ் ஜூனியர் அதிபர் பதவிக்கு வந்துள்ளார்.
அமெரிக்க சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ரென்க்விஸ்ட், புஷ் ஜூனியருக்கு பதவிப் பிரமானம் செய்து வைத்தார்.பழமையான பைபிளின் மீது உறுதி கூறி அதிபராகப் பதவியேற்றார் புஷ் ஜூனியர். அவருக்கு முன்னதாக டிக்செனி, துணை அதிபராகப் பதவியேற்றார்.
தலைநகர் வாஷிங்டனில் வெள்ளை மாளிகை வளாகத்தில் உள்ள கேபிடல் ஹில் பகுதியின் மேற்கு நுழைவாயிலில்புஷ் பதவியேற்பு நடந்தது. தந்தை, தாய், மனைவி, குழந்தைகளுடன் புஷ் ஜூனியர் கலந்து கொண்டார். அதேபோல, பதவி விலகிச் செல்லும் அதிபர் கிளிண்டன், துணை அதிபர் அல் கோர் ஆகியோரும் தங்களதுகுடும்பத்தினருடன் கலந்து கொண்டனர்.
அமெரிக்க நேரப்படி காலை 10 மணிக்கு பதவியேற்பு விழா துவங்கியது. எளிமையாக நடந்த இந்த பதவியேற்புநிகழ்ச்சியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விருந்தினர்கள் கலந்து கொண்டனர். பதவியேற்பு நிகழ்ச்சிக்கான செலவு 30மில்லியன் டாலர்கள் என்று மதிப்பிடப்பட்டிருந்தது.
புஷ் ஜூனியர் பதவியேற்றுக் கொண்ட பின் கிளிண்டன், அல் கோருக்கு நன்றிகள் தெரிவித்துக் கொண்டார்.அதிபர் தேர்தலில் போட்டியிட்டுத் தோல்வியுற்ற அல்கோர் இறுக்கமான முகத்துடன் கலந்து கொண்டார்.இருப்பினும் சிரித்த முகத்துடன் அனைவருடனும் வாழ்த்துக்களைப் பரிமாறிக் கொண்டார்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அமெரிக்க அதிபர் தேர்தல் நடந்தது. இதில் ஜனநாயகக் கட்சி சார்பில் அல் கோரும்,குடியரசுக் கட்சி சார்பில் புஷ் ஜூனியரும் போட்டியிட்டனர். ஆரம்பம் முதலே இருவருக்கும் கடும் போட்டிஇருந்தது. வாக்கு எண்ணிக்கையிலும் இது எதிரொலித்தது. வாக்கு எண்ணிக்கையில் ஏற்பட்ட குழப்பம் காரணமாகதேர்தல் முடிவு அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டது.
நீதிமன்றத்தில் போடப்பட்ட வழக்குகளின் இறுதியில், தனது தோல்வியை அல் கோர் ஒப்புக் கொண்டார்.இதையடுத்து புஷ் ஜூனியர் பதவிக்கு வர இருந்த தடை நீங்கியது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications