போலி நிதி நிறுவன மோசடி ரூ. 330 கோடி
சென்னை:
தமிழகத்தில் 40 வழக்குகளில் தொடர்புடைய மோசடி நிதி நிறுவனங்களிடமிருந்து ரூ 330 கோடி சொத்துக்களைக் கைப்பற்ற அரசு உத்தரவிட்டது.
இதுகுறித்து பொருளாதார குற்றப்பிரிவு ஐ.ஜி.பாலசுப்ரமணியம் நிருபர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் பல நிதி நிறுவனங்கள் உள்ளன. நிதிநிறுவனங்களில் முதலீடு செய்தவர்களை மோசடி செய்ததாக 368 நிறுவனங்கள் மீது வழக்குப்பதிவுசெய்யப்பட்டுள்ளது.
நிதிநிறுவனங்களில் 9 லட்சத்து 44 ஆயிரம் பேர் முதலீடு செய்து ஏமாந்துள்ளனர். பல கோடிக்கணக்கில் முதலீடு செய்தவர்களின் பணம் திருப்பிக்கொடுக்கப்படவில்லை.
இதையடுத்து பொருளாதார குற்றப்பிரிவில் வழக்குத் தொடரப்பட்டது. அவர்கள் விசாரணை நடத்திய பின்னர் 247 கோடி வரை பணம் திருப்பிக்கொடுக்கப்பட்டது. இன்னும் ஆயிரத்து 344 கோடி வரை பொதுமக்களுக்குப் பணம் திருப்பி வழங்கப்பட வேண்டியுள்ளது.
இந்த வழக்குகளில் சம்பந்தப்பட்ட நிதிநிறுவனங்களில் ஆயிரத்து 380 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது. 41 ஆயிரத்துவழக்குகளில் சம்பந்தப்பட்ட 330 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை கைப்பற்ற அரசு உத்தரவு போட்டு உள்ளது.
வழக்குகளில் சம்பந்தப்பட்ட ஆயிரத்து 322 பேரில் 343 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 238 பேர் தலைமறைவாக உள்ளனர்.
நிதி நிறுவனங்களிடம் கடன் பெற்றவர்களிடம் இருந்து பணத்தை திரும்ப பெறுவதற்கு முழு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் நிதிநிறுவனங்களிடம் பணம் கொடுத்து ஏமாந்தவர்களுக்கு 3 ஆண்டுகளுக்குள் பணம் திரும்ப கிடைத்திட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அனுபவ் நிதிநிறுவனத்துக்கு சொந்தமான பண்ணைகளில் மரங்களை திருடியதாக 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குடியாத்தத்தில் ஸ்ரீவாரி நிதிநிறுவனத்தில்முதலீடு செய்து ஏமாந்தவர்களுக்கு 40 சதவீத தொகையை கோர்ட்டு உத்தரவுப்படி வேலூர் மாவட்ட கலெக்டர் மூலம் வழங்கப்பட்டுள்ளது என்றார்ஐ.ஜி.பாலசுப்ரமணியம்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications