காஷ்மீரில் சண்டைநிறுத்தம் நீட்டிக்கப்படுமா?
டெல்லி:
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் சண்டைநிறுத்தத்தை மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டிக்கலாம் என்று மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் நவம்பர் 27 ம் தேதி முதல் இந்திய ராணுவ வீரர்கள் சண்டைநிறுத்தம் கடைபிடித்து வருகின்றனர். கடந்த மாதம் 26 ம்தேதியுடன் முடிவதாக இருந்த சண்டைநிறுத்தம் இம்மாதம் 26 ம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 26 ம் தேதிக்குப் பிறகு சண்டைநிறுத்தம்நீடிக்கப்படுமா? ரத்து ஆகுமா என்பது குறித்து இன்னும் முடிவாகவில்லை.
காஷ்மீரில் பாகிஸ்தான் தீவிரவாதிகளின் தாக்குதல் அதிகரித்து வருவதால் சண்டைநிறுத்தத்தை நீடிப்பதில் அர்த்தமே இல்லை என்று ஜம்மு காஷ்மீர் முதல்வர்பரூக் அப்துல்லாவும், பாரதிய ஜனதா கட்சித் தலைவர் பங்காரு லட்சுமணனும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் ஜம்மு காஷ்மீரில் பதட்டம் குறைந்து வருவதால் சண்டைநிறுத்தம் மேலும் ஒரு மாதத்திற்கு நீடிக்கப்படும் என்று தெரிகிறது. இதுதொடர்பாக அனைத்து அம்சங்களையும் மத்திய அரசு தீவிரமாக பரிசீலித்து வருகிறது.
இப்போதுள்ள சூழ்நிலையில் மேலும் ஒரு மாதம் சண்டைநிறுத்தத்தை மத்திய அரசு நீடிக்கலாம் என்று தெரிகிறது. இருப்பினும் பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்குஆதரவு கொடுக்கக் கூடாது. இந்தியாவுக்குள் தீவிரவாதிகள் ஊடுருவலை அனுமதிக்கக் கூடாது என்று இந்தியா தரப்பில் நிபந்தனைகள்விதிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய அமைச்சரவைப் பாதுகாப்பு கமிட்டி இன்னும் இரண்டு நாட்களில் கூடி இதுகுறித்து ஆலோசனை நடத்தும் என்று தெரிகிறது.
-
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்?












Click it and Unblock the Notifications