இன்று கொழும்பு வருகிறார் நார்வே தூதர்
கொழும்பு:
இலங்கையில் விடுதலைப்புலிகளுடன் சமரசப்பேச்சுவார்த்தை நடத்த முன்வருமாறு இலங்கை அரசை வலியுறுத்துவதற்காக நார்வே தூதர் எரிக்சோல்ஹெம்ஞாயிற்றுக்கிழமை கொழும்பு வருகிறார்.
விடுதலைப்புலிகள் கடந்த டிசம்பர் 24 ம் தேதி நள்ளிரவு முதல் சண்டைநிறுத்தம் அறிவித்தனர். ஆனால் இதை இலங்கை அரசு நிராகரித்து விட்டது. இதையடுத்துயாழ்ப்பாணத்தில் தொடர்ந்து சண்டை நடந்து வருகிறது.
இந்த நிலையில் நார்வே தூதர் எரிக்சோல்ஹெம் ஞாயிற்றுக்கிழமை கொழும்பு வருகிறார். அவர் இலங்கை அரசையும், விடுதலைப்புலிகளையும் சமரசம் செய்துபேச்சுவார்த்தை தொடங்க முயற்சி செய்வார்.
புலிகள் வரும் 24 ம் தேதி வரை சண்டைநிறுத்தம் அறிவித்துள்ளனர். தொடர்ந்து ராணுவ வீரர்கள் தாக்குதல் நடத்தினால் சண்டைநிறுத்தம்நீடிக்கப்படமாட்டாது என்று விடுதலைப்புலிகள் கூறியுள்ளனர். இந்தத் தகவலை எரிக் சோல்ஹெம் இலங்கை அரசிடம் தெரிவித்தார்.
பேச்சுவார்த்தைக்கு விடுதலைப்புலிகள் ஆர்வம் காட்ட வேண்டும். பேச்சுவார்த்தை நடத்தினால் அதன்மூலம் தீர்வு எட்டப்பட வேண்டும். அப்படியானால்விடுதலைப்புலிகளுடன் சண்டையை நிறுத்த முடியும் என்று இலங்கை அரசு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவரான ஆண்டன் பாலசிங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ராணுவ வீரர்கள் தாக்குதலை நிறுத்தி விட்டுபின்வாங்கிச் சென்றால் தான் பேச்சுவார்த்தையைத் தொடங்க முடியும்.
உலக நாடுகளின் வற்புறுத்தலின் பேரில்தான் நிறுத்தம் அறிவித்தனர். ஆனால் ராணுவ வீரர்களோ தாக்குதல் நடத்தி வருகிறார்கள். அவர்கள் தாக்குதலைநிறுத்தும் வரை பேச்சுவார்த்தை தொடங்காது என்று தெரிவித்துள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications