தமிழக போலீஸாருக்கு பாண்டி.யில் மிரட்டல்
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரியில், போதைப் பொருள் கடத்தல் தொடர்பாக விசாரிக்க வந்த தமிழக போலீஸ் அதிகாரிகளை சிலர்துப்பாக்கி முனையில் மிரட்டியதாக வெளியாகியுள்ள தகவல் தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்என்று பாண்டிச்சேரி மாநில காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் காந்திராஜ் கூறியுள்ளார்.
இதுகுறித்து பாண்டிச்சேரியில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், போதைப் பொருள் கடத்தல் தொடர்பாகதமிழக போலீஸ் அதிகாரிகள் குழு விசாரணைக்கு பாண்டிச்சேரி வந்துள்ளது. காலாபேட்டில் உள்ள கிளப்புக்குஅவர்கள் சென்றபோது, சிலர் துப்பாக்கியைக் கொண்டு அவர்களை மிரட்டியுள்ளனர்.
சென்னையில், பிடிபட்ட போதைப் பொருள் தொடர்பாக விசாரிப்பதற்காக வந்த காவல்துறையினரை மிரட்டியதுவருத்தம் தருகிறது. இந்த விஷயத்தை மூடி மறைக்க பாண்டிச்சேரி போலீஸார் முயலுகின்றனர்.
இதுகுறித்து முழுமையாக விசாரணை நடத்தினால், போதைப் பொருள் கடத்தில் தொடர்புடைய பாண்டிச்சேரிஅரசியல்வாதி குறித்த விவரம் தெரிய வரும் என்றார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications