தயாராகிறது "மெகா தேசியக் கொடி
Subscribe to Oneindia Tamil
பொள்ளாச்சி:
இந்திய குடியரசு தின விழாவின்போது பயன்படுத்துவதற்காக "மெகா சைஸ் தேசியக் கொடி கோவை மாவட்டம்பொள்ளாச்சியில் தயாராகி வருகிறது.
மொத்தம் 5.1 கிலோமீட்டர் நீளத்திற்கு இந்த தேசியக் கொடி இருக்கும். இதற்கான தயாரிப்புப் பணிபொள்ளாச்சியில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்தக் கொடியை பொள்ளாச்சியில் நடைபெறும், குடியரசு தினவிழாவின்போது 5000க்கும் மேற்பட்டோர் ஏந்திச் செல்வர்.
கின்னஸ் புத்தகத்தில் இடம்பெறும் கண்ணோட்டத்துடன் இந்தக் கொடி தயாரிக்கப்பட்டு வருகிறது. இதற்கு முன்புஅர்ஜென்டினாவில் அந்நாட்டுத் தேசியக் கொடியை 3000 பேர் சுமந்து சென்றதே தற்போது கின்னஸ்சாதனையாகும்.












Click it and Unblock the Notifications