குடியரசு தினத்தன்று தீக்குளிப்பு.. போலீஸ் உளவாளி மிரட்டல்

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

குடியரசு தினத்தையொட்டி டெல்லியில் வரும் ஜனவரி 26 ம் தேதி நடக்கும் அணிவகுப்பு நிகழ்ச்சியில் தீக்குளிப்பேன் என்று போலீஸ் உளவாளிஞாயிற்றுக்கிழமை மிரட்டல் விடுத்துள்ளார்.

அவர் பெயர் இந்திரஜித் காபா. வயது 44. கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு இவர் மேல் வழக்கு போடப்பட்டது. தன் மீது எதற்காக வழக்குப்போடப்பட்டது என்று காபா கூறுகையில், எனது பக்கத்து வீட்டில் வசித்து வருபவர் கமலேஷ் ஷார்தா. ஏற்றுமதி செய்து வரும் இவர் குறித்து வருமானவரித்துறை அதிகாரிகளுக்குத் தகவல் கொடுத்தேன். இதையடுத்து வருமான வரி சோதனையில் அவர் பிடிபட்டார். அவர் மேல் வழக்குப் பதிவுசெய்யப்பட்டது.

இதையடுத்து ஷார்தாவின் நெருங்கிய நண்பர்களான சில போலீஸார் என் மேல் பொய் வழக்குப் போட்டார்கள். இதையடுத்து மிரட்டல் மற்றும் பணம்பறித்தல் ஆகிய இரண்டு வழக்குகள் என் மேல் போடப்பட்டன. இதையடுத்து வழக்குகள் நீதிமன்றத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டன.

வழக்கை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம் எனக்கு பாதுகாப்பு அளிக்கக் கோரியும், என் மேல் போடப்பட்ட பொய் வழக்குகளை சி.பி.ஐ.க்குமாற்றக் கோரியும் உத்தரவிட்டார்கள். ஆனால் போலீஸார் இதை நிறைவேற்றத் தவறி விட்டார்கள். இது குறித்து எனக்கு நியாயம்கிடைப்பதற்காக போலீஸ் தலைமையகத்துக்குப் பல முறை சென்றேன். ஆனால் தோல்விதான் கிடைத்தது.

குடியரசு தினவிழாவில் சரியான நேரம் கிடைக்கும்போது என் மேல் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொள்வேன் என்று கூறியுள்ளார்.

காபா டெல்லியில் உள்ள மேற்குப்பகுதியில் பத்திரிக்கைகள் விற்று வருகிறார். இவர் 1998 ம் ஆண்டு அக்டோபர் 2 ம் தேதி இந்திய நுழைவாயிலில்முதல் உலகப்போர் நினைவு நாள் அனுசரிக்கப்பட்ட போது தீக்குளிக்க முயன்றார். அப்போது தன் மேல் மண்ணெண்ணெய் ஊற்றித் தீ வைத்துக் கொள்ள முயன்றபோது போலீஸார் அவரை தடுத்து நிறுத்தினர்.

பின்னர் இரண்டாவது முறையாக 1999 ம் ஆண்டு ஜனவரி 5 ம் தேதி போலீஸ் தலைமையகத்தில் விஷம் குடித்தார். அப்போது உடனடியாக அவர்மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உயிர் பிழைத்தார்.

மேலும் இந்திரஜித் காபாவுக்கு 1993 ம் ஆண்டு குற்றங்கள் குறித்து உடனடியாக தகவல்கள் கொடுத்ததைப் பாராட்டி விருது வழங்கப்பட்டது. ஆனால்அதையடுத்து தொடர்ந்து இவர், குற்றவாளிகளிடமிருந்து ஆபத்து வரலாம் என்பதால் தொடர்ந்து பயத்தில் வாழ்ந்து வருகிறார்.

இவரது குடும்பத்துக்கும் பல கோணங்களில் ஆபத்துக்கள் வருகின்றன. ஒவ்வொரு முறையும் இவர் வெளியே வரும்போது, தனது தாயார், மனைவி,மகள்களுக்கு பாதுகாப்பு இருப்பதில்லை. போலீஸாரும் டெல்லியிலிருந்து வேறு எங்காவது சென்று விடு என்று இவரை வற்புறுத்துகிறார்கள்.

ஐ.ஏ.என்.எஸ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+