கற்க ஆளில்லாமல் அழிந்து வரும் கெது
சென்னை:
இசை உலகில் இனிமையான வாத்தியம் ஒன்று இசைக்க ஆளில்லாமல் அழிந்துகொண்டிருக்கிறது
கெது எனப்படும் வாத்தியத்தின் இசை கேட்பவர்களை மகிழ்விக்கிறது. ஆனால் இதுயாராலும் உபயோகப்படுத்தப்படுவதில்லை என்பது வருந்தத்தக்க விஷயம்.
ஆவுடையார் கோவிலைச் சேர்ந்த சுப்ரமணியம் எனபவர் தம்புரா போல் இருக்கும்"கெது வாத்தியத்தை வாசித்தது வருகிறார். ஆனால் இந்த வாத்தியத்தை கற்பவர்கள்எவரும் கிடையாது. சுப்ரமணியத்தின் தந்தை ஒரு ஹரிகதா பாகவதர் அவரிடமிருந்துசுப்ரமணியம் இந்த வாத்தியத்தை வாசிக்க கற்றுக் கொண்டார்.
சுப்ரமணியத்திற்கு தற்போது 61 வயதாகிறது. அவர் ஆயுள் காப்பீட்டு கழகத்தில்பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் தமிழ்நாட்டில் உள்ள பல மாவட்டங்களுக்கும்சென்று தனது வாத்தியத்தை வாசித்து காட்டியிருக்கிறார்.
இது குறித்து சுப்ரமணியம் கூறுகையில், சென்ற ஆண்டிற்கு முந்தைய ஆண்டு எனக்குசென்டரல் சங்கீத நாடக அகாதமியால் ஒரு பணி ஒப்படைக்கப்பட்டது. அதில் ஒருபகுதியாக என்னிடம் இரண்டு மாணர்கள் கெது வாத்தியத்தை வாசிக்கும் விதத்தைகற்க வந்தார்கள். ஆனால் அவர்கள் 4 மாதங்களுக்கு பிறகு வரவில்லை.
ஜாலரி என்ற பெயர் கொண்ட இந்த வாத்தியம் எப்போது முதல் கெது எனஅழைக்கப்பட்டது என தெரியாது. தமிழில் கெது என்றால் எதையும் சமரசம் செய்துகொள்ளாத குணம் என்று பொருள்படும் என கூறினார்.
இந்த வாத்தியம் குறித்து புகழ் பெற்ற கர்நாடக சங்கீத வித்வான் மதுரை சேஷகோபலன்கூறுகையில், இந்த வாத்தியம் என் கச்சேரிக்கு மேலும் மெருகூட்டுகிறது என்றார். இந்தமாத துவக்கத்தில் நடந்த 12 மணி தொடர் கச்சேரியில் சேஷகோபாலன்சுப்ரமணியத்தையும் தன் பக்க வாத்தியக் குழுவினருடன் சேர்த்துக் கொண்டிருந்தார்.
கெது வாத்தியம் புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவிலில் வசிக்கும் இவரதுமூத்த சகோதரர் வீராசாமி ஐயரால் வாசித்து வரப் படுகிறது. இங்குள்ள பலநூற்றாண்டுகள் பழமையான யோகாம்பிகை கோயிலில் இவர் கெது வாத்தியத்தைவாசித்து வருகிறார்.
சுப்ரமணியத்தை பொறுத்தவரை, வாத்தியத்தை வாசிப்பதை விட இதை கற்க பலரும்முன்வர வேண்டும் என்பதையே விரும்புகிறார். சிலர் எனது வாத்தியத்தைவாசிக்கிறார்கள் என தெரிந்துவிட்டால் நான் எனது சொந்த கிராமத்திற்கு நிம்மதியாகசெல்வேன் என கூறுகிறார்.
யு.என்.ஐ.
-
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ்












Click it and Unblock the Notifications