மாணவர்களே ஒற்றுமையுடன் செயல்படுங்கள் .. வைகோ
கோவை:
அறிவியல் கண்டு பிடிப்புகளால் உலகம் சுருங்கி வந்தாலும், வேற்றுமைகள்விஸ்வரூபம் எடுக்கின்றன என ம.தி.மு.க பொதுச் செயலர் வைகோ தெரிவித்தார்.
கோவையில் ஜி.ஆர்.டி கல்லூரியில் நடந்த சங்கமம் 2001 விழாவில் கலந்து கொண்டுவைகோ பேசியதாவது:
ஏழு வண்ணங்கள் சங்கமித்தால் வெண்மை உருவாகிறது. ஹைட்ரஜனும் ஆக்சிஜனும்இணைந்தால் தண்ணீர் உருவாகிறது. ஹைட்ரஜன், ஆக்சிஜன், கார்பன் கூட்டுக்கலவையால் சர்க்கரை உருவாகிறது.
ஏழு சுரங்களின் இணைப்பால் புதிய இசை பிறக்கிறது. பல வேற்றுமைகளினால்உருவான இவற்றைப் போல, மாணவர்கள் ஒற்றுமையுடன் செயல்பட்டால் வெற்றிநிச்சயம் கிடைக்கும். அதனால் உங்கள் விருப்பம் நிறைவேறும்.
மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும், ஒற்றுமையால் அதை சாதிக்கமுடியும். அறிவியல் வளர்ச்சியால் உலகம் சுருங்கி வருகிறது. ஆனால் மனிதர்களுக்குள்இருக்கும் வேறுபாடுகள் விஸ்வரூபம் எடுத்து வருகின்றன.
இந்த சூழ்நிலையில் அனைவரையும் அரவணைத்துச் செல்ல முடியுமானால், அந்தவேற்றுமையும் மறைந்து போகும். மதங்களின் பெயரால் ரத்தத்தைச் சிந்துவதில்அர்த்தமே இல்லை.
முன்பு பொருளாதாரத்தில் அமெரிக்காவிற்கும் ஐரோப்பாவிற்கும் தான் யுத்தம்நடந்தது. இப்போது பொருளாதாரத்தில் இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே தான்போராட்டம்.
அறிவியல் எவ்வளவோ முன்னேறி இருந்தாலும், அவை இயற்கைச் சீற்றங்களைதடுக்கவோ, கட்டுப்படுத்தவோ முடியாது. வறட்சி, புயல், மழை என்ற சக்திகளைமாற்றவே முடியாது. அதேசமயம் மனிதர்களுக்கு உருவாகி வரும் நெருக்கடியைக் கூடஇன்னும் சரியான முறையில் அறிவியல் முறைகளால் தீர்க்கமுடியவில்லை.
எய்ட்ஸ்க்கு சரியான மருந்து இல்லை. இதை விட ஒருவருக்கு முகஸ்துதி என்பதுஆணவம், கர்வம், போதை, அகந்தையை உருவாக்கக்கூடியது. இவற்றைவிட்டொழிக்கவும், இவற்றிற்கு மயங்காமல் இருக்கவும் மணவர்கள் தங்களைப்பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார் வைகோ.
கண்ணப்பன் பெருமிதம்:
மற்றொரு பள்ளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய மத்திய மரபு சாரா எரிசக்தித் துறை அமைச்சர் கண்ணப்பன் கூறுகையில், அமெரிக்காவில் உள்ள இந்தியஇன்ஜினியர்களில் 17 சதவீதம் பேர் தமிழர்கள்.
அமெரிக்காவில் 30 சதவீதத்திற்கும் மேல் உள்ள இந்தியர்கள் இன்ஜினியர்களாகப் பணியாற்றி வருகின்றனர்.
இந்தியாவின் மக்கள் தொகைதான் பெரும் குறை என அனைவரும் கருதி வருகின்றனர். ஆனால் மனித சக்தி தான் மகத்தான சக்தி என்பதைநிரூபித்துள்ளோம். அதே சமயம், அளவுக்கு மீறி ய மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த வேண்டிய கட்டாயத்திலும் நநாம் உள்ளோம்என்றார் கண்ணப்பன்.
-
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications