ராமர் கோவிலை கட்டியே தீருவோம் ... வி.எச்.பி.

Subscribe to Oneindia Tamil

கும்பாநகர் (அலகாபாத்):

2002 ம் ஆண்டு மார்ச் 12 க்குள் ராமர் கோவில் கட்ட அனுமதி தர வேண்டும் என்று விஸ்வ இந்து பரிஷத் சனிக்கிழமை மத்திய அரசைக் கேட்டுக்கொண்டுள்ளது.

மேலும் அரசு அனுமதி தந்தவுடன் எந்த நேரத்திலும் ராமர் கோவில் கட்டப்படும் என்றும் அவர்கள் அறிவித்துள்ளனர்.

உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் 1992 ம் ஆண்டு பாபர் மசூதி இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டது. சர்ச்சைக்குரிய அந்த இடத்தில் ராமர் கோவில்கட்ட அனுமதி தர வேண்டும் என்று விஸ்வ இந்து பரிஷத் பல ஆண்டுகளாகக் கூறி வருகிறது. அயோத்தி விவகாரம் தற்போது நீதிமன்றத்தில் உள்ளது.

இந்நிலையில் அலகாபாத் கும்பமேளாவில் கலந்து கொண்ட விஸ்வ இந்து பரிஷத் உறுப்பினர்கள் காவிநிற தலைப்பாகை அணிந்து, பொதுக்கூட்டம் நடத்தினர்.கூட்டத்தில் அவர்கள் எடுத்த தீர்மானங்கள் வருமாறு:

அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் ராமர் கோவில் கட்டியே தீர வேண்டும். ராமர் கோவில் கட்டுவதற்குள்ள தடைகளை பிரதமர்வாஜ்பாய் நீக்க வேண்டும் என்று தீர்மானங்கள் எடுத்தனர்.

இந்தக் கூட்டத்தில் விஸ்வ இந்து பரிஷத் உறுப்பினர்கள் சத்யமித்ரானந்த், நிரஞ்சனி அகாரா, விஸ்வதேவ் ஆனந்த், சுவாமி உபோதானந்த் ஆகியோர் உள்படபலர் கலந்து கொண்டனர்.

கூட்டம் முடிந்ததும், விஸ்வ இந்து பரிஷத் பிரமுகர் மகந்த் ராம் சந்திரா பரம்ஹன்ஸ் நிருபர்களிடம் கூறுகையில், அயோத்தியில் ராமர் கோவில் கட்டியேதீரப்படும். பூமியில் எந்த சக்தியாலும் ராமர் கோவில் கட்டுவதை தடுத்து நிறுத்த முடியாது. 2002 ம் ஆண்டு மார்ச் மாதம் 12 ம் தேதிக்குள் மத்தியஅரசு கோவில் கட்ட அனுமதி தர வேண்டும். இதற்கு பிரதமர் வாஜ்பாய் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்றார்.

ஐ.ஏ.என்.எஸ்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+