வறுமையை ஒழிப்பதே லட்சியம் .. அப்துல் கலாம்
திருவண்ணாமலை:
தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இந்தியாவின் வறுமையை ஒழிப்பதே என் முக்கியபணி என விஞ்ஞானி அப்துல்கலாம் கூறியுள்ளார்.
திருவண்ணாமலையில் இருக்கும் அருணா பொறியியல் கல்லூரியில் தொழில்நுட்பம்தொடர்பான தேசிய அளவிளான கருத்தரங்கம் தொடங்கியது.
இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரியின் தலைவர் வடிவேலு தலைமை தாங்கினார். விழாவைஇந்திய விஞ்ஞானி அப்துல் கலாம் குத்துவிளக்கு ஏற்றிவைத்து தொடங்கி வைத்துபேசினார். அவர் பேசுகையில் கூறியதாவது:
இந்திய மக்கள் தொகையில் 70 சதவிகிதம் பேர் இளைஞர்கள். சுதந்திரம் பெற்ற பின்நாம் பல துறைகளில் முன்னேறியுள்ளோம். வேளாண்மை தொழில் துறையில்குறிப்பிடத்தக்க அளவில் முன்னேறி இருக்கிறோம்.
ஆனாலும் நம் நாட்டில் பெரும்பாலான மக்கள் இன்னும் வறுமை
கோட்டிற்கு கீழ்தான் வாழ்ந்து வருகிறார்கள்.
இன்றைய இளைஞர்களிடையே தாழ்வு மனப்பான்மை காணப்படுகிறது. உங்களிடம்இருக்கும தோல்வி மனப்பான்மையை ஒழித்து விட்டு தன்னம்பிக்கையையும்,தைரியத்தையும் பெருக்கிக் கொள்ள வேண்டும்.
சவாலை தன்னம்பிக்கையோடும், தைரியத்தோடும் சந்தித்தால் வெற்றி உங்களை தேடிவரும். நம் நாடு வங்கி வரிசையில் 59-வது இடத்தில் இருக்கிறது. இதை 3,4,5-வதுஇடத்திற்கு கொண்டு வர பாடுபட்டு வருகிறோம்.
ஏவுகணை ராக்கெட் வெற்றிக்காக என்னை பாராட்டுகிறார்கள். அது என் தனிப்பட்டவெற்றி அல்ல. நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கானவர்களின் கூட்டு முயற்சி.இந்தியாவை வளமிக்க நாடாக மாற்றுவதில் தொழில் துறைக்கும் முக்கிய பங்குஉண்டு.
நான் மத்திய அரசின் தலைமை விஞ்ஞான ஆலோசகனாக இருக்கிறேன். தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இந்தியாவில் வறுமைையை ஒழிக்க பாடுபடுவேன் எனகூறினார்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications