விரும்பியவருடன் செக்ஸ் .. மாறி வரும் இங்கிலாந்து
லண்டன்:
இங்கிலாந்தில் வாழும் ஆண்கள், தாங்கள் விரும்பியபடி எந்தப் பெண்ணுடன் வேண்டுமானாலும் செக்ஸ் தொடர்பு வைத்துக் கொள்வதற்காக, திருமணமேசெய்து கொள்ளாமல் இருக்கிறார்கள்.
இதுகுறித்து நடத்தப்பட்ட ஆய்வில் தெரிய வந்த விவரங்கள்:
இருபதாண்டுகளுக்கு முன் இங்கிலாந்தில் திருமணம் செய்து கொள்ளும் ஆண்களின் சராசரி வயது 26. ஆனால் இப்போது 30 வயது தாண்டியும் இங்கிலாந்துஇளைஞர்கள் திருமணத்துக்கு சம்மதிக்கவே மறுக்கிறார்கள். ஏனெனில் திருமணம் என்ற பந்தத்துக்குள் நுழையாமல் தாங்கள் விரும்பயபடி செக்ஸ்தொடர்பு வைத்துக் கொள்வதற்காக இவ்வாறு செய்கிறார்கள்.
காதல் ஜோடிகள் மற்றும் குடும்பஸ்தர்களின் பிரச்சனைகளுக்காக ஆலோசனை மையம் நடத்தி வரும் மார்ஜ் தோபர்ன் கூறுகையில், 20 வருடங்களுக்குமுன் இங்கிலாந்தில் வாழும் ஆண்கள் திருமண பந்தம் நீடிக்க வேண்டும் என்பதற்காகவே திருமணம் செய்து கொண்டார்கள். ஆனால் இப்போது அந்தநிலையே மாறி விட்டது. யார் வேண்டுமானாலும் யாருடன் வேண்டுமானாலும் உடல் ரீதியான தொடர்பு வைத்துக் கொள்ளலாம் என்ற நிலை ஏற்பட்டுவிட்டது.
இதற்கு இன்னொரு காரணமும் இருக்கிறது. இங்கிலாந்தில் உள்ள இளைஞர்கள் 20 வயதிலேயே தங்களது பெற்றோர்களிடமிருந்து பிரிந்து விடுகிறார்கள்.பின்னர் தாங்களாகவே தங்கள் இஷ்டப்படி வாழ்க்கை நடத்துகிறார்கள். இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம் என்றார்.












Click it and Unblock the Notifications