வறுமை .. குழந்தையைக் கொன்றார் தந்தை
கோவை:
வறுமையின் கொடுமையால், மருத்துவ சிகிச்சை அளிக்க முடியாத தந்தை பெற்றகுழந்தையைக் கொன்று வீசினார். போலீஸார் அவரைக் கைது செய்தனர்.
அவிநாசி அருகே உள்ள வேலாயுதம்பாளையத்தைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளிமுருகன் (40). மனைவி சரசாள் (30). இவர்களுக்கு முத்துச் செல்வன் (9), திவ்யா (4)ஆகிய குழந்தைகள் உண்டு.
குழந்தை திவ்யா வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டு இருந்தார். இதனால் அடிக்கடிவலிப்பு வரும்போது பல இடங்களுக்குச் சென்று சிகிச்சை அளித்துள்ளனர். ஆனால்,பலனில்லை.
குழந்தைக்கு சிகிச்சை அளிக்க பொருளாதார வசதி இடம் கொடுக்கவில்லை. எனவேதனது குழந்தையை ஒட்டன்சத்திரம் அருகே உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று சிகிச்சை அளிக்கப் போவதாகத் தெரிவித்தார்.
பின்னர் திவ்யாவை அழைத்துக் கொண்டு ஊட்டி அருகே உள்ள பர்லியாரில் காட்டுப்பகுதிக்கு எடுத்துச் சென்று திவ்யாவின் கழுத்தை நெறித்து கொன்று பிணத்தைஅங்கேயே வீசி விட்டு வந்தார்.
வீட்டுக்குத் திரும்பிய முருகன், மனைவியிடம் சிகிச்சைக்காக குழந்தையைமருத்துவமனையிலேயே தங்க வைத்து விட்டு வந்ததாகத் தெரிவித்தார்.குணமானவுடன் அழைத்து வருவதாகக் கூறியுள்ளார். ஆனால் மனைவி சரசாள் திரும்பதிரும்ப வற்புறுத்தியதால், குழந்தையின் அழுகிய சடலத்தை வீட்டுக்கு எடுத்துக்கொண்டு வந்து போட்டு விட்டு ஓடி விட்டார்.
இது குறித்து சரசாள் போலீசாருக்குத் தகவல் தெரிவித்தார். போலீசார் வழக்குப் பதிவுசெய்து கணவன் முருகனைக் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications