அரசியலுக்கு விடை கொடுத்தார் இரா. செழியன்
சென்னை:
தமிழகத்தின் மூத்த அரசியல்வாதியான இரா.செழியன் தீவிர அரசியலிலிருந்து ஓய்வு பெறுவதாகஅறிவித்துள்ளார்.
மறைந்த முன்னாள் நிதியமைச்சர் இரா. நெடுஞ்செழியனின் தம்பிதான் இரா.செழியன் என்பது குறிப்பிடத்தக்கது.
மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணா, பெரியாருடன் கருத்து வேறுபாடு கொண்டு திராவிட முன்னேற்றக்கழகத்தைத் துவக்கியபோது, அவருடன் இணைந்து செயல்பட்டவர் இரா. செழியன். அதன் பிறகு திமுகவிலிருந்துவெளியேறி, ஜனதாக் கட்சியில் சேர்ந்தார்.
ஜெயப்பிரகாஷ் நாராயணனுடன் இணைந்து செயல்பட்ட செழியன், பின்னர் ஜனதாக் கட்சி ஜனதாதளமாகமாறியபோதும் முக்கியப் பொறுப்புகளில் இருந்து வந்தார்.
ராமகிருஷ்ண ஹெக்டே, ஜனதாதளத்திலிருந்து நீக்கப்பட்ட பின்னர் துவங்கிய லோக் தளம் கட்சியின் துணைத்தலைவராகப் பொறுப்பு வகித்து வந்தார்.
அரசுப் பதவிகளில் நாட்டமில்லாது, இறுதி வரை கட்சிப் பணிகளிலேயே தீவிரமாக இருந்தவர் செழியன். 20ஆண்டுகளுக்கும் மேலாக எம்.பி பதவி வகித்தவர். அப்பழுக்கற்ற அரசியல்வாதி என்ற பெயரைப் பெற்றவர் இரா.செழியன்.
அரசியலிலிருந்து விலகுவது ஏன் என்று செழியன் வெளியிட்ட அறிக்கையில், எந்த அரசியல் கட்சிக்கும் நான்சொந்தக்காரன் அல்ல. பொது மனிதன். அரசியலில் இல்லை என்றாலும் கூட, மக்கள் சம்பந்தமான பிரச்சினைகளில்தொடர்ந்து போராடுவேன். அவர்களுக்காக நடத்தப்படும் எந்தப் போராட்டத்திலும் முன்வந்து செயல்படுவேன்.
மனிதனை, ஒரு அரசியல் விலங்கு என்று கிரேக்க ஞானி அரிஸ்டாட்டில் வர்ணித்தார். எனவே, நானும் அத்தகையமனிதனாக, மனிதநேயம் கொண்ட அரசியல்வாதியாகவும் தொடர்ந்து பாடுபடுவேன்.
நாட்டின் ஒளிமயமான எதிர்காலத்திற்கு அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார் செழியன்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications