மூப்பனார் தலைமையில் 3 வது அணி
கோவை:
3 வது அணிக்கு மூப்பனார் தலைமை தாங்குவார், அ.தி.மு.க., தி.மு.க.,விற்கு இது மாற்றாக அமையும் என புதிய நீதிக்கட்சியின் தலைவர் ஏ.சி சண்முகம் தெரிவித்தார்.
கோவையில் புதிய நீதிக் கட்சியின் தொகுதி மாநாடு நடந்தது. இதில் கலந்து கொண்ட சண்முகம் நிருபர்களுக்குஅளித்த பேட்டியில் கூறியதாவது:
தமிழ்நாட்டில் 3வது அணியாக தமிழ்நாடு ஜனநாயகக் கூட்டணி அமைத்துள்ளோம். இந்த அணிக்கு நான்தலைவராக உள்ளேன். செயலாளராக கொங்குநாடு மக்கள் கட்சியின் தலைவர் தேவராஜன் உள்ளார். 3 வதுஅணிக்கு தலைமை தாங்கும்படி மூப்பனாரை அழைத்துள்ளேன். மாநில நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசனைசெய்து விட்டு முடிவை அறிவிப்பதாக அவர் கூறியுள்ளார். இதற்கான அறிவிப்பு விரைவில் வரும் எனஎதிர்பார்க்கிறேன்.
தமிழ்நாட்டில் 3 வது அணி அமைந்தால், நாங்கள் அதில் அதிகபட்ச இடங்களில் போட்டியிடுவோம். எங்களுக்குஅடுத்தபடியாகத் தான் த.மா.கா போட்டியிடும்.
இந்த அணியில்சேர பிள்ளைமார் சங்கம், தாயக மக்கள் கட்சி, கொங்குநாடு மக்கள் கட்சி, மக்கள் தமிழ்தேசம்,போன்ற கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்.
மேலும் பல கட்சிகள் இணைய வாய்ப்பு உள்ளது. தமிழ்நாட்டில் நாங்கள் தனித்துப் போட்டியிட்டாலும் கூட 70தொகுதிகளில் வெற்றி பெறுவோம். மிக குறுகிய காலத்தில் அபரிதமான வளர்ச்சியைப் பெற்றுள்ளோம்.
எங்கள் கூட்டணி வெற்றி பெற்றால் கூட்டணியில் இடம் பெற்ற அனைத்துக் கட்சிகளுக்கும் ஆட்சியில் பங்குதருவோம். புதிய நீதிக் கட்சியின் தேர்தல் பட்டியல் தயாராக உள்ளது. ஈரோடு தொகுதியில் சுதானந்தன்போட்டியிடுவார் என்றார் சண்முகம்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications