பேச நேரம் கோரி எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு
சென்னை:
சட்டசபையில் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் போது, பேசுவதற்கு அதிக நேரம் கொடுக்காததைக் கண்டித்து அ.தி.மு.க, த.மா.காஎம்.எல்.ஏக்கள் திங்கள்கிழமை வெளிநடப்பு செய்தனர்.
முதலில் த.மா.கா. உறுப்பினர்கள், எதிர்க்கட்சித் தலைவர் சோ.பாலகிருஷ்ணன் தலைமையில் வெளிநடப்புச் செய்தனர். அவையில் கவர்னர் உரை மீதானதீர்மானத்தின் மீது த.மா.கா உறுப்பினர் ஞானசேகரன் 26 நிமிடங்களுக்கும் மேல் பேசினார். இதையடுத்து துணை சபாநாயகர் பரிதி இளம்வழுதி அவரைஅமரும்படிக் கூறினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து த.மா.கா. எம்.எல்.ஏக்கள் சபையை விட்டு வெளியேறினர்.
முன்னதாக பேசிய த.மா.கா எம்.எல்.ஏ. ஞானசேகரன், வீரப்பனைப் பிடிப்பதற்கு அரசு முயற்சி எடுக்கவில்லை என்றும், தமிழர் தேசிய இயக்கத்தலைவர் பழ.நெடுமாறனைக் கைது செய்யக் கோரியும் பேசினார். அவர் தனது பேச்சை முடிப்பதற்கு இன்னும் சில நொடிகளே இருந்தன. ஆனால் தொடர்ந்துஅவர் பேச துணை சபாநாயகர் அனுமதி அளிக்கவில்லை.
இதையடுத்து, சட்டசபையில் ஜனநாயகமே இல்லை என்று கூறிக் கொண்டே தனது கட்சி எம்.எல்.ஏ.க்களுடன் வெளியேறினார். பின்னர் சிறிது நேரத்தில்அவர்கள் மீண்டும் அவையில் வந்து அமர்ந்தனர்.
சில நிமிடங்கள் கழித்து, அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ஆர்.விஸ்வநாதனுக்கு பேசுவதற்கு அதிக நேரம் அளிக்காததையடுத்து, அதிமுக சட்டசபைத் தலைவர் சுந்தரம்தலைமையில் அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்புச் செய்தனர்.
யு.என்.ஐ.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications